கைவிட்ட சிவகார்த்திகேயன்?.. அஜித்திடம் தஞ்சம் புகும் வெங்கட் பிரபு?.. மங்காத்தா 2 ரெடியா?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் மங்காத்தா. அஜித்துக்கு அது 50ஆவது படமாகவும் அமைந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்த படம் ரிலீஸ் சமயத்தில் ஓபனிங்கில் மிகப்பெரிய ரெக்கார்டு வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை இரண்டாவது பாகத்துக்கான லீடோடு முடித்திருப்பார் வெங்கட். ஆனால் இத்தனை வருடங்கள் ஆகியும் அதுகுறித்து எந்த மூவ்மென்ட்டும் தெரியவில்லை. இந்நிலையில் மங்காத்தா 2 பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை 28 படத்தில் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு; முதல் மூன்று படங்களிலேயே நல்ல இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். இருப்பினும் அதுவரை அவர் பணியாற்றியது பெரிய ஹீரோக்களுடன் இல்லை. அதன் காரணமாக அஜித்தின் 50ஆவது படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வந்தபோது ஏகே ரசிகர்களேகூட ரொம்பவே பயந்து போனார்கள். அஜித்தை வைத்து இவர் ஹேண்டில் செய்துவிடுவாரா என்ற சந்தேகத்தால்தான் அந்த பயம் அனைவருக்குமே எழுந்தது. இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கை கொஞ்சம் வைத்திருந்தார்கள்.

மெகா ப்ளாக் பஸ்டர் ஆன படம்: இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி அமரன், ஜெயப்பிரகாஷ், வைபவ், மஹத், அஷ்வின் என பலர் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு ரிலீஸான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தின் கதை, திரைக்கதை ஆகிய இரண்டு ஏரியாக்களிலுமே இயக்குநர் புகுந்து விளையாடியிருந்தார். அதற்கு பக்கபலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், தீம் இசை, பின்னணி இசை எல்லாம் அமைந்திருந்தன. ரசிகர்கள் ஒரு திருவிழா போல் அந்தப் படத்தை கொண்டாடினார்கள்.
மங்காத்தா 2: அந்தப் படத்தை இரண்டாவது பாகத்துக்கான லீடோடு முடித்திருந்தார். எனவே இரண்டாவது பாகம் உருவாகும் என்ற ஆசையில் இருந்தார்கள். ஆனால் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன பிறகும் அதுகுறித்து எதுவும் உறுதியாக தெரியவில்லை. கண்டிப்பாக மங்காத்தா 2 வரும் என்று இடை இடையே தகவல்கள் மட்டும் வந்தன. வெங்கட் பிரபுவும் அஜித்தை பலமுறை சந்தித்துவிட்டார். அந்த சந்திப்பின்போதெல்லாம், மங்காத்தா 2 பற்றிதான் பேசினார்கள் என்று பேச்சுக்கள் கிளம்பும். அவர்களோ சைலென்ட்டாக அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.
படம் கன்ஃபார்ம் வருதா?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குவதாக இருந்தார். ஆனால் எஸ்கேவோ இந்தப் படத்தின் மீது கவனம் செலுத்தாமல்; சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்திலும், இன்னொரு படத்திலும் நடிப்பதற்கு ரெடியாகிவிட்டார். எனவே வெங்கட் பிரபுவுடனான படத்தை ட்ராப் செய்துவிட்டார்கள் என்றும்; எனவே அஜித்தை வைத்து மங்காத்தா 2 படத்தை இயக்க திட்டமிட்டு; அதற்கான கதை விவாதத்தில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித்தின் லைன் அப்: அஜித்தை பொறுத்தவரை அவர் இப்போது கார் ரேஸில் தீவிரமாக கவனம் செலுத்திவருகிறார். அதேசமயம் சினிமாக்களில் நடிப்பதையும் அவர் விடவில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என்றும்; அதனை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவுடன் இணைந்து மங்காத்தா 2 படத்தை கொடுப்பார் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. எப்படியோ மங்காத்தா 2 வந்தால் போதும் அதையும் திருவிழா போல் கொண்டாடுவோம் என்ற மைண்ட் செட்டில் இருக்கிறார்கள் ஏகே ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications
