மங்காத்தா 2 மாஸா ரெடியாகப் போகுதா?.. திடீரென அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு.. கோட் கேமியோ?
சென்னை: நடிகர் அஜித் குமார் டாப் கியரில் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வருகிறார். அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? அல்லது எச். வினோத்தா? என கேள்விகள் கிளம்பி வந்த நிலையில், திடீரென வெங்கட் பிரபுவுடன் சந்திப்பை நடத்தியிருக்கிறார். வெளிநாட்டில் அஜித் மற்றும் வெங்கட் பிரபு சந்தித்துக் கொண்ட போட்டோவை சற்றுமுன் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பல வருடங்களாக வெங்கட் பிரபுவுக்கு மிஸ் ஆகி வந்த நிலையில், மீண்டும் அஜித்தை சந்தித்துள்ள நிலையில், கூடிய சீக்கிரமே மங்காத்தா 2 அப்டேட்டை வெங்கட் பிரபு கொடுப்பார் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் வேறவொரு ஸ்பெஷல் கேமியோவையும் எதிர்பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். வெங்கட் பிரபு என்னத்த கிண்டப் போகிறாரோ கோட் படத்தில் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
அஜித் - வெங்கட் பிரபு சந்திப்பு: அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக மீண்டும் அஜித் சென்ற நிலையில், அஜர்பைஜான் தலைநகர் பகுவிற்கே சென்று வெங்கட் பிரபு அவசர அவசரமாக அஜித்தை சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்புக்கு பின்னணியில் என்ன காரணம் இருக்கும் என ரசிகர்கள் ஏகப்பட்ட யூகங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். அதன் பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவே இல்லை. இந்நிலையில், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்க கதை கேட்டுள்ளாரா? என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன.
மங்காத்தா 2: மங்காத்தா படத்தின் படப்பிடிப்பில் அஜித் மற்றும் விஜய் சந்திப்பு நடந்த நிலையில், விடாமுயற்சி சூட்டிங்கில் வெங்கட் பிரபு அஜித்தை சென்று சந்தித்துள்ள நிலையில், அடுத்த படத்திற்கு கதை கேட்கவே அஜித் அழைத்திருப்பார் எனக் கூறுகின்றனர். மங்காத்தா 2 படத்தை ரசிகர்களுக்காக உருவாக்க அஜித் முடிவு செய்து விட்டாரா என அஜித் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

கோட் படத்தில் கேமியோ?: தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வரப்போகும் நிலையில், விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்தால் ரசிகர்களுக்கு அதைவிட பெரிய ட்ரீட் எதுவும் இருக்காது என்பதால், கோட் படத்தில் அஜித்தையும் கேமியோ ரோலில் நடிக்க வைக்க அஜர்பைஜானுக்கே சென்று வெங்கட் பிரபு விண்ணப்பத்தை போட்டு வந்துள்ளாரா? வெங்கட் பிரபு இவ்ளோ ஹேப்பியாக இருப்பதை பார்த்தால் கோட் படத்தில் அஜித்தும் ஒரு கேமியோ ரோலில் வரப் போகிறாரா? என தளபதி ரசிகர்கள் இன்னொரு பக்கம் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் இது அடுத்த படத்துக்கான சந்திப்பாகத்தான் இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோட் ரிலீஸ்: வரும் செப்டம்பர் 5ம் தேதி கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான பணிகளை முழுவதுமாக வெங்கட் பிரபு முடித்து விட்டதாகவும் புரமோஷன் தான் இனிமேல் பாக்கி என்கிற நிலையில், தனது அடுத்த படத்துக்கான ஹீரோ தேடுதல் வேட்டையில் வெங்கட் பிரபு இறங்கியுள்ளார் என்றே கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











