தல ரசிகாஸ் நீங்க ஆசைப்பட்டது தப்பில்ல, காத்திருந்தது வீண் போகல
சென்னை: அஜித் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்ப்பது விரைவில் நடக்க உள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தல 60 படத்தையும் ஹெச். வினோத் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது. அதையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.
50வது படம் மங்காத்தா என்பதால் 60வது படம் மங்காத்தா 2 ஆக இருக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் விரும்புகிறார்கள். மங்காத்தா 2 படம் எப்பொழுது வரும் என்று தல ரசிகர்கள் வெகுகாலமாக காத்திருக்கிறார்கள்.

இயக்குநர் வெங்கட் பிரபு அண்மை காலமாக அளிக்கும் பேட்டிகளில் மங்காத்தா 2 பற்றி கேட்டால் அது விரைவில் நடக்கும் என்பது போன்றே சூசமாக பதில் அளிக்கிறார். அவர் அண்மையில் அஜித்தை சந்தித்து பேசியது கூட படம் தொடர்பாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மங்காத்தா 2 தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். வெங்கட் பிரபு மங்காத்தா 2 படத்திற்கு தயாராகி வரும் நிலையில் போனி கபூரோ அஜித்தை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறார்.
இதில் யார் ஆசை முதலில் நிறைவேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











