மங்காத்தா 2 வருவது உறுதியா?.. டீல் போட்ட வெங்கட் பிரபு?.. அட நடந்தா செம சூப்பரா இருக்குமே பாஸ்

சென்னை: அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படம் மங்கத்தா. அந்தப் படம் கடந்த 2011ஆம் ஆண்டு யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி வந்தது. அதற்கு முன்னதாக அஜித் நடித்திருந்த அசல், ஏகன் ஆகிய இரண்டு படங்களுமே மோசமான தோல்வியை சந்தித்திருந்தன. இது 50ஆவது படமாக உருவாகியிருந்தது. எனவே அந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. படமும் அந்த ஹைப்பை எல்லாம் பூர்த்தி செய்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்திருக்கிறார். முக்கியமாக பில்லா திரைப்படம்தான் அவரது தரமான கம்பேக்காக இருந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்த அசல், ஏகன் ஆகிய இரண்டு படங்களுமே மோசமான தோல்விகளை மட்டுமின்றி; ட்ரோல்களையும் சம்பாதித்தன. அப்போதைக்கு இந்த அளவுக்கு சோஷியல் மீடியா வளர்ச்சி இல்லாததன் காரணமாக அப்படங்களை மேற்கொண்டு டேமேஜ் ஆக்காமல் விட்டார்கள் ரசிகர்கள்.

Mankatha 2 Venkat Prabhu Narrates Sequel Idea Ajith Kumar s Decision Awaited
Photo Credit:

ஏகே 50ஆவது படம்: வரிசையாக இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு தனது 50ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். மங்காத்தா என்கிற பெயரில் அதை இயக்குவதற்கு கமிட்டானார் வெங்கட் பிரபு. ஏகேவை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குகிறார் என்று தகவல் வந்ததுமே ஏகே ரசிகர்களுக்கு கொஞ்சம் நடுக்கம் வந்தது. அதுவரை அவர் இயக்கியிருந்த படங்கள் ஹிட்டாகியிருந்தாலும்; ஏனோ அவர் ரொம்பவே இளமையாக இருந்ததால் பெரிய ஹீரோ படத்தை சாரியாக ஹேண்டில் செய்துவிடுவாரா என்ற சந்தேகமும் அத்தனை பேரிடமும் இருந்தது.

மெகா ப்ளாக் பஸ்டரான படம்: ஆனால் அவர்களுக்கெல்லாம் தனது திரை மொழியால் தரமான பதிலடி கொடுத்தார் இயக்குநர். படத்தின் முதல் பாதியில் காமெடிகள், காதல், கொஞ்சம் ஆக்ஷன் என திரைக்கதையை நகர்த்தி; இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு கூட்டி; க்ளைமேக்ஸில் தரமான ட்விஸ்ட்டை வைத்து படத்தை முடித்திருந்தார் வெங்கட். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டை பார்க்கையில் தியேட்டரில் ரசிகர்கள் ஆனந்த குத்தாட்டம் போட்டார்கள். கண்டிப்பாக இப்படி ஒரு 50ஆவது படம் யாருக்குமே அமையாது என கொண்டாடினார்கள்.

Also Read
விஜய், திரிஷாவுக்கு திருமணம் முடிந்தது.. குண்டை தூக்கிப்போடும் பிரபலம்.. இது என்னங்க புதுசா இருக்கு?
விஜய், திரிஷாவுக்கு திருமணம் முடிந்தது.. குண்டை தூக்கிப்போடும் பிரபலம்.. இது என்னங்க புதுசா இருக்கு?

மங்காத்தா 2 தாமதம்: அந்தப் படத்தின் முடிவில் இரண்டாவது பாகம் எடுப்பதற்கான லீடோடுதான் முடித்திருந்தார் இயக்குநர். ஆனால் இன்னமும் அதுகுறித்த எந்த செயல்களும் தொடங்கவில்லை. வெங்கட்டிடமும் தொடர்ந்து மங்காத்தா 2 பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அவரும் கழுவும் மீனில் நழுவும் மீனாக எஸ்கேப் ஆகிக்கொண்டிருந்தார். ஆனால் கண்டிப்பாக மங்காத்தா 2 படம் வர வேண்டும் என்பதுதான் ஏகே மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இரண்டு பேரின் ரசிகர்களுடைய விருப்பமாக இருக்கிறது.

புதிய தகவல்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் இப்போது பிஸியான தயாரிப்பாளராக மாறியிருக்கும் கண்ணன் ரவியை சமீபத்தில் வெங்கட் பிரபு சந்தித்தாராம். அப்போது மங்காத்தா இரண்டாம் பாகத்துக்கான அவுட் லைனை சொன்னதாகவும்; அது அவருக்கு பிடித்துவிட்டதால் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் அஜித் ஓகே சொல்ல வேண்டுமே. அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அநேகமாக மங்காத்தா 2வுக்கு ஓகே சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X