twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அச்சச்சோ.. இத வச்சித் தானே ஓட்டிட்டு இருந்தாங்க.. மங்காத்தால அந்த பைக் ஸ்டன்ட் சீனை அஜித் பண்ணலயாம்?

    |

    சென்னை: மங்காத்தா படத்தில் வீலிங் செய்தபடி அஜித் பைக் ஓட்டும் காட்சியை உண்மையிலேயே அவர் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    பைக் மற்றும் கார் ரேஸ்களை ஓட்டுவதில் கில்லாடியானவர் தல அஜித். பல படங்களில் பல ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சிகளையும் செய்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படத்தில் வரும் பைக் ஸ்டன்ட் சீன் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா நேரத்தில்.. எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்.. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!கொரோனா நேரத்தில்.. எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்.. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!

    ரியல் ரேஸர்

    ரியல் ரேஸர்

    2003ம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா BMW கார் ரேஸ் போட்டியில் சர்வதேச டிராக்கில் காரை ஓட்டி அசத்தியவர் நடிகர் அஜித். அதன் பின்னர், 2010ம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா 2 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது என்றால் அஜித்துக்கு கொள்ளை பிரியம். பல முறை அதில் அடிபட்டு உடம்பில் பல அறுவை சிகிச்சைகளையும் சந்தித்துள்ளார்.

    மங்காத்தா

    மங்காத்தா

    2011ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, அஞ்சலி, வைபவ், மகத், பிரேம்ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா. பில்லா படத்திற்கு பிறகு வெளியான ஏகன், அசல் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், அஜித்துக்கு மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது இந்த படம்.

    மாஸ் வீலிங்

    மாஸ் வீலிங்

    நடிகர் வைபவை பைக்குக்கு பின்னால் அமர வைத்துக் கொண்டு, ஒற்றை வீலில் வீலிங் செய்தபடியே நெரிசலான சாலையில் தல அஜித் பைக்கில் பறக்கும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களை வாயை பிளக்க வைத்து பார்க்க வைத்தது. அந்த பைக் ரேஸ் காட்சியை அஜித் தான் செய்தார் என்றே பேச்சுக்கள் அடிபட்டன.

    வைபவ் பேட்டி

    வைபவ் பேட்டி

    மங்காத்தா படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடிகர் வைபவ், தல அஜித் பின்னால் தன்னால் அந்த காட்சியில் உட்கார்ந்து வர முடியவில்லை என்றும், அந்த அளவுக்கு தனக்கு பயமாக இருந்தது நடிகர் அஜித்தை கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களை பொத்திக் கொண்டு தான் அந்த காட்சியில் நடித்தேன் என பேட்டியளித்து, அந்த காட்சிக்கு மேலும் பில்டப் கொடுத்திருந்தார்.

    அஜித் இல்லை

    அஜித் இல்லை

    இந்நிலையில், தற்போது அந்த காட்சியில் அஜித் பைக் ஓட்டவில்லை என்றும், ஓட்டியது ஸ்டன்ட் மேன்களான நாங்கள் தான் என அபிஷேக் மற்றும் செந்தில் ஆகியோர் சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    பொய் சொல்றாங்க

    பொய் சொல்றாங்க

    இந்த பேட்டி வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள், இதையெல்லாம் நம்ப முடியாது என்றும், அந்த ஸ்டன்ட் காட்சியை செய்தது தல அஜித் தான் என்றும், அதனை அவரே பேட்டியில் கூறியுள்ளார். மேலும், நடிகர் வைபவும் தனது பேட்டியில் அஜித்தின் பின்னால் தான் அமர்ந்து அந்த காட்சியில் நடித்ததாக கூறி இதனை முற்றிலுமாக மறுத்து வருகின்றனர்.

    விளக்குவாரா

    விளக்குவாரா

    இந்த காட்சி குறித்த உண்மைத் தன்மையை இயக்குநர் வெங்கட் பிரபுதான் விளக்க வேண்டும் என்றும், அந்த பைக் ஸ்டன்ட் காட்சியை தல அஜித்தே செய்தாரா? அல்லது ஸ்டன்ட்மேன்களான அபிஷேக் மற்றும் செந்தில் தான் செய்தார்களா? என்ற உண்மையை வெங்கட் பிரபு கூற வேண்டும் என விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் கமெண்ட்டுகளில் கேட்டு வருகின்றனர்.

    English summary
    Tamil cinema stuntman Abishek and Senthil would do the popular bike stunt in tha movie Mankatha and not Ajith himself news started the fan war.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X