Mankatha Box Office - மங்காத்தா ரீ ரிலீஸ் இத்தனை கோடி வசூலா?.. அட முக்கிய தலைக்கட்டே அடித்து சொல்லிட்டாரே

சென்னை: அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மங்காத்தா திரைப்படம் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸானது. வழக்கம்போல் ஏகே ரசிகர்கள் இப்படத்தை ஏகபோகமாக கொண்டாடினார்கள். வசூலிலும் சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெற்றது. இந்நிலையில் திரையரங்க உரிமையாளரான திருச்சி ஸ்ரீதர் மங்காத்தா திரைப்படத்தின் உண்மையான வசூல் குறித்து கொடுத்திருக்கும் பேட்டி அஜித் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த படம் மங்காத்தா. இதில் அவருடன் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, பிரேம்ஜி அமரன், வைபவ், மகத், லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ் என பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் அறிவிப்பு 15 வருடங்களுக்கு முன்பு வந்தபோது அஜித்தை வைத்து வெங்கட் பிரபு சொதப்பி எடுக்கப்போகிறார்; ஜாலியாக படங்கள் செய்யும் வெங்கட் அஜித்தை எப்படி ஹேண்டில் செய்வாரோ என்று திரைத்துறையிலும், ரசிகர்களிடமும் பரவலாக பேச்சு இருந்தது நினைவுகூரத்தக்கது.

படம் மெகா ஹிட்: ஆனால் அப்படி பேசிய அனைவரையுமே தனது வேலையால் வாயை மூட செய்துவிட்டார் வெங்கட் பிரபு. சீனுக்கு சீன் ரசிகர்களை நகரவிடாமல் சீட்டிலேயே அமர வைத்து சுவாரஸ்யம் குறையாதபடி திரைக்கதையை அமைத்திருந்தார். முக்கியமாக க்ளைமேக்ஸின் ட்விஸ்ட் வந்தபோதெல்லாம் திரையரங்குகளே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது என்பதுதான் உண்மை. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி வசூல் வேட்டை நடத்தியது.

Mankatha Box Office Collection Revealed by Trichy Sridhar Movie 21 Crores Collects in Tamil Nadu
Photo Credit:

மங்காத்தா ரீ ரிலீஸ்: அப்படத்தின் பிரமாண்ட வெற்றிதான் அடுத்ததாக பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்கு பெற்றுக்கொடுத்தது. சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் 23ஆம் தேதி இப்படமானது 15 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஏற்கனவே அஜித்தின் அட்டகாசம் படம் ரீ ரிலீஸ் ஆகியிருந்தாலும் மங்காத்தா ரீ ரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல்தான். இதனால் இதனையும் திருவிழா போல் கொண்டாட தயாரானார்கள்.

தியேட்டர்களில் திருவிழா: நினைத்தபடியே 23ஆம் தேதியை அவர்கள் திருவிழாவாக மாற்றிவிட்டார்கள். கட் அவுட்டுகள், பட்டாசுகள் என அதகளம் செய்தார்கள். அதேசமயம் சில ரசிகர்களோ தியேட்டருக்குள்ளேயே பட்டாசு வெடித்து அத்துமீறவும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரீ ரிலீஸுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை வைத்து கண்டிப்பாக கில்லி, படையப்பா ஆகிய படங்களின் ரீ ரிலீஸ் வசூல் சாதனையை முறியடித்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

திருச்சி ஸ்ரீதர் பேட்டி: அதற்கேற்றபடிதான் ரீ ரிலீஸாகி சில நாட்களில் வசூல் வேட்டையும் இருந்தது. ஆனால் நாளாக நாளாக அதன் வசூல் டல்லடித்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது. Sacnilk இணையதளத்தின் தரவுகள் படி அந்தப் படமானது இந்தியாவில் 15 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் பிரபல திரையரங்கத்தின் உரிமையாளரான திருச்சி ஸ்ரீதர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் மங்காத்தா படத்தின் வசூல் பற்றி கூறியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸில் முதல் நான்கு நாட்களில் 16 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூலித்தது. அதற்கு பிறகு ஒரு வாரத்தின் முடிவில் 21 கோடி ரூபாய் வசூலித்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X