Mankatha Day 6 Box Office - மங்காத்தா 6வது நாள் வசூல் இப்படி ஆகிப்போச்சே?.. பாக்ஸ் ஆஃபிஸில் திணறல்

சென்னை: அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மங்காத்தா திரைப்படம் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸானது. ரசிகர்கள் வழக்கம்போல் தங்களது வரவேற்பை கொடுக்க; சில நாட்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் படம் பட்டையை கிளப்பியது. ஆனால் இப்போது மொத்தமாக வசூல் வேட்டை குறைந்துவிட்டது. இந்நிலையில் ரீ ரிலீஸாகி ஆறாவது நாளான நேற்று அப்படம் செய்திருக்கும் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஹிட்டான படங்கள் கடந்த சில காலமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது. விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா உள்ளிட்ட படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றன. அந்தவகையில் டயர் 1 ஹீரோக்களில் ஒருவரான அஜித்தின் படமான மங்காத்தாவும் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டு படம் வெளியானபோதே மிகப்பெரிய வரவேற்பை படம் பெற்றது.

படத்தின் ஸ்பெஷல்கள்: படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் ஸ்பெஷலாக இருந்தன. அதுவரை அஜித்தை அப்படி ஒரு வில்லத்தனமான நடிப்பில் யாருமே பார்க்கவில்லை. வெங்கட் பிரபு மீதும், அவரது இயக்கத்தின் மீதும் முழு நம்பிக்கையை வைத்து அப்படி ஒரு ரோலை ஏற்றிருந்தார் ஏகே. பெரிய ஹீரோக்கள் யாரும் மங்காத்தாவில் அஜித் ஏற்றது மாதிரியான ஒரு ரோலை ஏற்க இன்னமும் தயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Mankatha Day 6 Box Office Ajith Film Sees Sharp Drop 6th Day Total Collection is 11 5 Crores
Photo Credit:

அனைத்தும் சூப்பராக அமைந்தன: அஜித்தின் நடிப்பு மட்டுமின்றி யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, வெங்கட் பிரபுவின் இயக்கம், படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் உழைப்பு என அத்தனையும் கூடி வந்ததால் ஏகேவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் முழு திருப்தியை படம் கொடுத்தது. எப்போதுமே மங்காத்தாவை தங்களுக்கு நெருக்கமாக உணர்வதால் ரீ ரிலீஸின்போதும் முழு ஆதரவையும் கொடுத்தார்கள். புதிதாக ரிலீஸான திரௌபதி 2 படத்தைக்கூட மங்காத்தா ரீ ரிலீஸ் ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் நிலவரம்: முதன்முறை ரிலீஸானபோது எப்படி வசூலில் படம் சக்கைப்போடு போட்டதோ அதேபோல் ரீ ரிலீஸிலும் ரிசல்ட்டை பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே முதல் சில நாட்கள் கெத்து காண்பித்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாக்ஸ் ஆஃபிஸில் மங்காத்தாவின் வீரியம் குறைந்துவிட்டதாகவே தெரிகிறது. படங்களின் வசூல் கணக்கை தினமும் தவறாமல் வெளியிடும் Sacnilk இணையதளம் இப்படம் ரிலீஸாகி ஆறு நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற விவரத்தை வெளியிட்டிருக்கிறது.

எவ்வளவு வசூல்?: அதன்படி ரீ ரிலீஸாகி முதல் நான்கு நாட்களில் 11.40 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்பட்டது. ஆனால் ஐந்தாவது நாளில் 40 லட்சமாக அதன் வசூல் குறைந்தது. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று வெறும் 12 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. மொத்தம் ஆறு நாட்களில் 11.52 கோடி ரூபாயை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிகிறது. திடீரென இப்படி வசூல் குறைந்துவிட்டதால் ஏகே ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: mankatha ajith
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X