Mankatha Day 7 Box Office - மங்காத்தா 7வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் இப்படி ஆட்டம் காணுதே

சென்னை: வெங்கட் பிரபு இயக்கி அஜித் ஹீரோவாக நடித்த மங்காத்தா திரைப்படம் 15 வருடங்களுக்கு பின்னர் ரீ ரிலீஸாகியிருக்கிறது. முதன்முறை எப்படி வரவேற்பை அள்ளி கொடுத்தார்களோ அதே அளவுக்கான வரவேற்பை இந்த முறையும் கொடுத்தார்கள். இந்நிலையில் ரீ ரிலீஸாகி நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் அப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபுவுக்கு நான்காவது படமே அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை அவர் இயக்கியிருந்த சென்னை 28, சரோஜா, கோவா ஆகிய படங்களில் கோவாவை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகியிருந்தன. ஆனாலும் அஜித்தின் 50வது படமான மங்காத்தா ஹிட்டாகுமா இல்லை தோல்வியடையுமா என்ற சந்தேகம்தான் ரசிகர்களிடம் எழுந்திருந்தது.

அஜித்துக்கு இருந்த நம்பிக்கை: முதலில் இந்தக் கதையில் சத்யராஜ்தான் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் வெங்கட்டிடம் இருந்த லைனை கேட்டு உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டார் அஜித். ஏற்கனவே வாலி, வரலாறு ஆகிய படங்களில் வில்லத்தனத்தை தனது நடிப்பில் காட்டியிருந்தாலும் மங்காத்தாவில் வெங்கட் பிரபு ஹீரோவுக்கு வைத்திருந்த வில்லத்தனம் கண்டிப்பாக சென்சேஷனல் ஆகும் என்று உணர்ந்ததை அடுத்து முழு நம்பிக்கையுடன் படத்தில் நடித்தார் ஏகே.

Mankatha Day 7 Box Office Ajith s Film Collects 11 78 Crore in One Week
Photo Credit:

மெகா ப்ளாக் பஸ்டர்: அவர் எதிர்பார்த்தபடியே அஜித் ஏற்றிருந்த விநாயக் மகாதேவ் கேரக்டர் அஜித் ரசிகர்களை மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகரக்ளையும் கவர்ந்தது. ஹீரோவாக சக்சஸ்ஃபுல்லாக வரும் யாருமே இப்படி ஒரு வில்லத்தனத்தோடு நடிக்கமாட்டார்கள். அஜித்துக்கு தைரியம் அதிகம்தான் என்று பாராட்டு கிடைத்தது. அவரை மட்டுமின்றி பெரிய ஹீரோவுக்கான படங்களில் சீன்களையும், ட்விஸ்ட்டையும் எப்படி வைக்க வேண்டும் என்பதையும் இளம் இயக்குநர்களுக்கு உணர்த்தியிருந்தார் வெங்கட். அதுமட்டுமின்றி யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பட்டையை கிளப்ப படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

ரீ ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க மங்காத்தா திரைப்படம் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ஏகே ரசிகர்கள் ஏகோபோகமாக கொண்டாடினார்கள். முதல் சில நாட்களில் வசூல் சக்கைப்போடு போட்டது. எனவே ரீ ரிலீஸில் நிச்சயம் இப்படம் பெரிய சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் ரீ ரிலீஸாகி நேற்றோரு ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் நிலையில் அப்படம் செய்திருக்கும் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் வசூல் என்ன?: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள் படி, ஏழாவது நாளான நேற்று மங்காத்தா 26 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். இதன் மூலம் ஒரு வாரத்தில் 11 கோடியே 78 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்த்த வசூலைவிட குறைவுதான் என்றாலும் இன்னும் சில நாட்கள் தியேட்டர்களில் படம் ஓடும் என தெரிவதால் கண்டிப்பாக மேற்கொண்டு வசூலித்து சாதனைகள் படைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஏகே ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X