என்னது, விசுவாசத்தில் 'மங்காத்தா மேஜிக்'கா?
Recommended Video

விசுவாசம் படத்தின் நியூஸ் காணோமே என்று பதைபதைக்கும் தல ரசிகர்கள்.
சென்னை: விசுவாசம் படத்தில் மங்காத்தா மேஜிக் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், இமான் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விசுவாசம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விசுவாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உண்மையா என்பதை சிவா தான் உறுதி செய்ய வேண்டும். 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தில் அஜீத்துடன் சேர்ந்து அசத்தியிருந்தார் அர்ஜுன்.
விசுவாசம் படத்திலும் அந்த வெற்றி கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Comments


Click it and Unblock the Notifications