Mankatha: TVK கொடியை அசைத்தவருக்கு அடி உதை.. தியேட்டர் வளாகத்தில் விஜய் ரசிகரை பதம் பார்த்த அஜித் ரசிகர்கள்

காரைக்குடி: நடிகர் அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளதா இல்லை, இப்போதுதான் ரிலீஸ் ஆகியுள்ளதா என்ற சந்தேகத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் இருக்கும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தை திருவிழா போல மாற்றி வருகிறார்கள். அதுவும் சென்னை, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு, கோவை போன்ற மாநகரங்களில் ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

அஜித்தின் 50வது படம், அஜித் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒரு படம் மங்காத்தா. தமிழ் திரையுலகில் ரீ ரிலீஸ் கலாச்சாரம், அதன் மூலம் வருவாய் என மெல்ல மெல்ல தலை தூக்கும் போது, அஜித் ரசிகர்கள் வைத்த பெரிய கோரிக்கை, மங்காத்தாவை ரீ ரிலீஸ் செய்யுங்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதுதான்.

மாஸ் ஓபனிங் என்றாலே அது தமிழ் சினிமாவில் அஜித் ரசிகர்கள் தான். அப்படி இருக்கும் போது, ரசிகர்கள் கேட்டதற்கு ஏற்ற வகையில் மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே படத்தின் ரீ ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகி, இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Mankatha Re Release Ajith Fans Assaulted Vijay Fan At Theatre Who Showed TVK Flag And Shout TVK TVK
Photo Credit:

சேட்டை செய்த விஜய் ரசிகர்: தல வந்தா தமிழ்நாடே ஆடும் என்பதைப் போல தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், விஜய் ரசிகர் ஒருவர் மங்காத்தா படம் பார்க்க வந்துள்ளார். வந்தவர் நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை எடுத்துக் கொண்டு வந்து, கொடியை அசைத்து, விஜய் ரசிகர்கள் வழக்கமாக கத்துவது போல, TVK ... TVK ... TVK .. என்று கத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் அந்த விஜய் ரசிகரை தொடக்கத்தில் இங்கு வேண்டாமே என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் கேட்காத அந்த விஜய் ரசிகர் தொடர்ந்து அதே போல் கத்திக் கொண்டு இருக்க, அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பொருமையை இழந்து, அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

விஜய் ரசிகருக்கு அடி உதை: மேலும், சில அஜித் ரசிகர்கள், அடிடா அவனை.. உதைடா அவனை.. கொடியை பிடுங்கி கிழிங்கடா என்றும் கத்துகிறார்கள். இந்த சம்பவம் காரைக்குடியில் உள்ள ஒரு தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தியேட்டர் உரிமையாளர்கள் விஜய் ரசிகரைக் காப்பாற்றி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை.

Mankatha Re Release Ajith Fans Assaulted Vijay Fan At Theatre Who Showed TVK Flag And Shout TVK TVK

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X