Mankatha Celebrations: தமிழ்நாடு மட்டுமல்ல.. கேரளாவும் சேர்ந்து ஆடுது.. மங்காத்தா ரீ ரிலீஸ் கொண்டாட்டம்

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில், உருவாகி கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமான மங்காத்தா, 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரீ ரிலீஸ் புக்கிங் என்பது படக்குழு எதிர்பார்த்ததைப் போலவே, வெகு சிறப்பாக இருந்தது. படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றுள்ளார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் படத்திற்கு முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கேரளாவில் காலை 7.30 மணிக்கே சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. கொச்சினில் திரையிடப்பட்ட தியேட்டரில் ஹவுஸ் ஃபுல் ஷோவாக ஓடிக் கொண்டுள்ளது. அஜித்தின் எண்ட்ரி காட்சியின் போது அஜித் ரசிகர்கள் தியேட்டரே அதிரும் அளவுக்கு கொண்டாடி வரவேற்றுள்ளார்கள். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Mankatha Re Release Ajith Fans Celebration Tamilnadu Kerala Karnataka Video
Photo Credit:

அதேபோல் சென்னை ரோகிணி திரையரங்கின் முகப்பு தொடங்கி பக்கவாட்டு வரை மங்காத்தா படத்தின் பேனர்கள் பிரமாண்ட சைஸில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மேள தாளத்துடனும் பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டம் என கலக்கி வருகிறார்கள். மேலும் வடபழனி கமலா தியேட்டரிலும் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகிறார்கள். சென்னையின் பல்வேறு தியேட்டர்களில் ரீ ரிலீஸின் முதல் நாளான இன்று, பெரும்பான்மையான காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக மாறிவிட்டது.

புக் மை ஷோவில் ஒரு லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் முன் பதிவு செய்யப்பட்ட முதல் ரீ ரிலீஸ் தமிழ் படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸின் பிரமாண்டமான இரண்டு ஸ்கீரின்களிலும் ஹவுஸ் ஃபுல் காட்சியாக இருப்பதால், தியேட்டர் வாசலில் அஜித் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ரசிகர்கள் அஜித் பேனருக்கு கையால் சூடம் காட்டுவதும், தேங்காய், பூசணிக்காய் சுற்றி உடைப்பதும், கொண்டாடி மகிழ்வதும் என தியேட்டர்களே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X