Mankatha Re Release Box Office: கில்லியை இல்லை.. படையப்பாவை கூட ஓவர்டேக் பண்ணாத மங்காத்தா வசூல்!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் கடந்த வாரம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி இந்த ஜனவரி மாதத்தை கொஞ்சம் காப்பாற்றி வருகிறது. ஆனால், விஜய்யின் கில்லி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படங்களின் ரீ ரிலீஸ் வசூலை மங்காத்தா முந்தவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஜனநாயகன் திரைப்படம் மட்டும் இந்த மாதம் ரிலீஸ் ஆகியிருந்தால் தமிழ் சினிமாவில் அட்லீஸ்ட் ஒரு 500 கோடி வசூல் படமாக அது மாறியிருக்கும். ஆனால், தணிக்கை வாரியத்துடன் வழக்கு போர் நடத்தி வருவதால், படம் வெளியாகாமல் தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி நிறுவனம் மற்றும் ஜனநாயகன் படக்குழு என பலர் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

Mankatha Re Release Box Office can t beat Vijay s Ghilli and Rajinikanth s Padaiyappa at worldwide

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான பராசக்தி திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அந்த படத்தைத் தொடர்ந்து தலைவர் தம்பி தலைமையில் மற்றும் மங்காத்தா ரீ ரிலீஸ் படங்கள் தான் இந்த மாதம் அதிக வசூலை ஈட்டியுள்ளன.

தலைவர் தம்பி தலைமையில் வசூல்: சிவகார்த்திகேயனின் பராசக்தி 100 கோடி வசூலை பாக்ஸ் ஆபீஸில் ஈட்டியிருந்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால், அந்த படம் பிளாக்பஸ்டர் இல்லை என்றே பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் கூறுகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் வெளியான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் உலகளவில் 34 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், இந்த மாதத்தின் வெற்றிப் படமாக மாறியுள்ளது.

மானத்தைக் காப்பாற்றிய மங்காத்தா: இந்த ஜனவரி மாதம் பராசக்தி, தலைவர் தம்பி தலைமையில் படங்களை தொடர்ந்து 10 கோடிக்கு மேல் வசூல் செய்து மங்காத்தா ரீ ரிலீஸ் தான் தமிழ் சினிமாவின் மானத்தைக் காப்பாற்றியுள்ளது. இதுவரை 5 நாட்களில் ஒட்டுமொத்தமாக 11.8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

படையப்பா ரீ ரிலீஸ் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா, அப்பாஸ், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படையப்பா படம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ரீ ரிலீஸ் ஆன நிலையில், கடந்த ஆண்டு அதிகப்படியாக உலகளவில் 19 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. மங்காத்தா திரைப்படம் படையப்பா வசூல் சாதனையை கூட முறியடிக்க முடியாமல் சுருண்டு விட்டது.

கில்லி தான் டாப்: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரீ ரிலீஸில் விஜய்யின் கில்லி தான் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலகளவில் கில்லி திரைப்படம் மறு வெளியீட்டில் 30 கோடி + வசூலை ஈட்டியது. அந்த சாதனையை இதுவரை மற்ற ரீ ரிலீஸ் படங்கள் செய்யவில்லை. இந்தியளவில் ரீ ரிலீஸ் படங்களில் அதிக வசூலை பாகுபலி தி எபிக் திரைப்படம் செய்து முதலிடத்தில் உள்ளது. அந்த படம் அதிகப்படியாக 72 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியளவில் விஜய்யின் கில்லி 5வது இடத்திலும், ரஜினிகாந்தின் படையப்பா 6வது இடத்திலும் உள்ளது. ஷோலே 13 கோடி வசூலுடன் 8வது இடத்திலும் உள்ளது. 13 கோடி வசூலை கடந்தால் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் 8வது இடத்தை பிடிக்கும். இல்லையென்றால் 9வது இடத்தை பிடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X