Mankatha Vs Ghilli Box Office - மங்காத்தா வசூலில் காட்டும் கெத்து.. கில்லி சாதனைக்கு குழி தோண்டியாச்சா?
சென்னை: அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதன்முறை ரிலீஸாகும்போது படத்தை எப்படி ரசிகர்கள் கொண்டாடினார்களோ அதேபோன்ற வரவேற்பை இந்த முறையும் கொடுத்தார்கள். இது ஒருபக்கம் இருக்க ரீ ரிலீஸில் மங்காத்தா கில்லி, படையப்பா படங்களின் வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான படம் மங்காத்தா. இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி, மகத், ஜெயபிரகாஷ் என பலர் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அஜித்தின் ஐம்பதாவது படமாக இது உருவானது. இந்தப் படத்துக்கு முன்னர் ஏகே நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் இந்தப் படம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
மெகா ஹிட்: கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படத்துக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை கொடுத்திருந்தார்கள். வெங்கட் பிரபுவும் தனது டைரக்ஷனில் தரமான சம்பவத்தை செய்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அஜித்தின் மாஸுக்கு எந்த குறையும் வைக்காமல், அதேசமயம் கதைக்கு தேவையான அளவு மட்டுமே மாஸ் காட்சிகளை வைத்தது, அர்ஜுனுக்கும் கதையில் சரி சமமான இடம் என பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். யுவனின் பிஜிஎம் மற்றும் பாடல்களும், அஜித்தின் வில்லத்தனமான நடிப்பும் கை கொடுக்க படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

ஏகேவுக்கு முக்கியமான படமாக அமைந்த மங்காத்தா: கோலிவுட்டில் 50ஆவது படம் பெரும்பாலான ஹீரோக்களுக்கு கெட்ட நினைவுகளையே கொடுத்திருக்கிறது. ஆனால் அஜித்துக்கு அப்படி இல்லை. அவரது கரியரிலேயே மிக மிக முக்கியமான படமாக அது அமைதுவிட்டது. வெங்கட் பிரபுவும் இந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகுதான் பெரிய ஹீரோக்களான சூர்யா, விஜய் உள்ளிட்டோரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மங்காத்தா ரீ ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க இப்படம் கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதன்முறை ரிலீஸாகும்போது படத்துக்கு எப்படி உற்சாக வரவேற்பை கொடுத்தார்களோ அதே ரிசல்ட்டைத்தான் இந்த முறையும் பார்க்க முடிந்தது. சாமானிய ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை தியேட்டருக்கு சென்று திருவிழா போல் கொண்டாடிவருகிறார்கள். இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கே பல சாதனைகளை படைத்ததாக திரைத்துறையில் பேச்சுக்கள் ஓடின.
கில்லி, படையப்பா ரெக்கார்டு ஓவர்: இந்நிலையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா படம் இரண்டு நாட்களில் செய்திருக்கும் வசூல் கில்லி, படையப்பா ரீ ரிலீஸ் வசூலைவிட அதிகம் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தமிழ்நாட்டில் ரீ ரிலீஸின்போது கில்லி 7.70 கோடி ரூபாயையும், படையப்பா படம் 8 கோடி ரூபாயையும் இரண்டு நாட்களில் வசூலித்திருந்ததாகவும்; மங்காத்தா படமோ இரண்டே நாட்களில் 8 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் கில்லி, படையப்பா ரெக்கார்டுகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாக ஏகே ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











