Mankatha Re Release Day 4 Box Office - மங்காத்தா 4வது நாள் வசூல் என்ன?.. இப்படி படுத்துடுச்சே
சென்னை: அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. ஏகேவின் 50வது படமாக வெளியான அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூழல் இப்படி இருக்க 15 வருடங்கள் கழித்து கடந்த 23ஆம் தேதி அப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறையும் அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள். இந்நிலையில் மறு வெளியீடு செய்யப்பட்ட நான்கு நாட்களில் அப்படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் ஹீரோவாக வென்றவர்கள் பெரும்பாலும் தங்களது கரியரில் அதே பாதையில்தான் செல்வதற்கு விரும்புவார்கள். ஒருவகையில் அவர்களுக்கு அது பாதுகாப்பானதும்கூட. ஹீரோ பயணம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும்போது யாரும் வில்லனாக நடித்து ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். ஆனால் அஜித் மங்காத்தா படத்தில் அந்த ரிஸ்க்கை எடுத்தார். ஏற்கனவே வாலி உள்ளிட்ட படங்களில் வில்லத்தனத்தோடு கூடிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இது முற்றிலும் வேறு மாதிரி இருந்தது.
நடிப்பில் மிரட்டிய அஜித்: வெங்கட் பிரபு இயக்கியிருந்த மங்காத்தா படத்தில் படு ராவாக நடித்திருந்தார் அஜித். பல கெட்ட வார்த்தைகளை பேசி, இரக்கமே இல்லாத வில்லனாக மிரட்டியிருந்தார் ஏகே. அவர் அப்படி நடித்ததை பார்த்துதான் பல நடிகர்கள், நாமும் வில்லனாக நடித்தால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அப்படத்தில் அஜித் ஏற்றிருந்த ரோலை பார்த்து திரைத்துறையில் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெகா ஹிட்டான மங்காத்தா: அஜித்தின் வில்லத்தனமான நடிப்பு, வெங்கட் பிரபுவின் அட்டகாசமான திரைக்கதை, யுவன் ஷங்கர் ராஜாவின் மாஸ் பிஜிஎம் மற்றும் பாடல்கள் என அத்தனையும் அந்தப் படத்தில் கூடி வந்தது. இதன் காரணமாக மங்காத்தா மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவின் கரியரும் உச்சம் சென்றது. குறிப்பாக பல ஹீரோக்களுக்கு 50வது படம் ஊத்திக்கொண்ட சூழலில் அஜித்துக்கும் மெகா ஹிட்டாக அமைந்ததும் கவனிக்கத்தக்கது.
மங்காத்தா ரீ ரிலீஸ்: ஏகே ரசிகர்களிடம் அஜித் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களை சொல்லுங்கள் என்று சொன்னால்; கண்டிப்பாக மங்காத்தாவை டாப் 3 இடத்துக்குள்தான் சொல்வார்கள். இப்படி பல நல்ல அனுபவங்களை கொடுத்த மங்காத்தா கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 15 வருடங்களுக்கு முன்பு ரிலீஸானபோது படத்துக்கு எப்படி பெரிய வரவேற்பை கொடுத்தார்களோ அதேபோல் இந்த முறையும் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்கள்.
மங்காத்தா வசூல் நிலவரம்: இந்நிலையில் ரீ ரிலீஸில் மங்காத்தா செய்த வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் நாளில் 3.75 கோடி, இரண்டாவது நாளில் 2.35 கோடி, மூன்றாவது நாளில் 3 கோடி ரூபாயை வசூலித்து மொத்தம் 10.25 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. தற்போது நான்காவது நாளான நேற்று அப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வந்திருக்கிறது. அதன்படி குடியரசு தினமான நேற்று 1.15 கோடி ரூபாய் வரை வசூலித்து 4 நாட்களில் மொத்தம் 11.40 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.


Click it and Unblock the Notifications











