Mankatha: பால் முதல் கேம்பா அபிஷேகம் வரை.. 1000 வாலா வெடியைச் சுற்றி சுற்றி வீசும் AK ரசிகர்கள்!
சென்னை: புதிய படங்கள் ரீலீஸ் ஆகும்போது ரசிகர்கள் எந்த அளவுக்கு கொண்டாடுகிறார்களோ, அதே போல் ரீ ரிலீஸ்களையும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், ஏற்கனவே திரையில் பார்த்து பார்த்து கொண்டாடிய ஒரு படத்தை பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பார்ப்பது என்பது கடந்த கால நினைவுகளை மீண்டும் மனதிற்குள் அசை போட வைக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அப்படி அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி இருக்கையில் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் வெடி வெடித்து, பேனர்களுக்கு மாலைகள் அணிவித்து, டிரம்ஸ் வாசித்து, ஆட்டம் ஆடி, டி.ஜே போன்ற இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்து அசத்தி வருகிறார்கள்.

வழக்கமாக அபிமான நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்கள் நடிகர்களின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். இது போலச் செய்யாதீர்கள் என்று நடிகர்கள் சொன்னாலும் கேட்பதாக இல்லை. இப்படி இருக்கையில் அஜித் ரசிகர்கள் அஜித்தின் பேனருக்கு பால் அபிஷேகம் மட்டும் இல்லாமல். அவர் சமீபத்தில் நடித்த விளம்பரமான கேம்பா குளிர் பானத்தையும் ஊற்றி அவரது பேனருக்கு அபிஷேகம் செய்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல் ஒரு ரசிகர், தனது கையில் 1000 வாலா பட்டாசை பற்றவைத்து, நடு ரோட்டில் நின்று கொண்டு, பட்டாசு வெடிக்கும் போது அதை சுற்றிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்களின் இது போன்ற செயல்களை பார்த்த இணையவாசிகள் பலரும், அஜித் ரசிகர்களின் அலப்பறை ஸ்டார்ட் என்று பகிர்ந்து வருகிறார்கள். கேரளாவிலும் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் தியேட்டருக்குள் வெடி வெடித்து அலப்பறை செய்துள்ளனர். இதைப் பார்த்த பலரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ரசிக மனப்பான்மையில் ஆபத்துகளை உணராமல் செயல்படுவது தவறு என்று விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











