Mankatha Day 4 Box Office: குடியரசு தின விடுமுறை.. மங்காத்தா புக்கிங் எப்படி?.. பச்சையா? ஆரஞ்சா?

சென்னை: பராசக்தி உள்பட இந்த ஆண்டு வெளியான புதிய படங்கள் தான் 2 நாட்கள் அல்லது 3 நாட்களுக்கு மேல் காலியாகிறது என்று பார்த்தால் மங்காத்தா ரீ ரிலீஸ் நிலைமையும் அதே போல மாறிவிட்டதே என படத்தை நம்பி வாங்கிப் போட்ட பல தியேட்டர் ஓனர்கள் ஈ ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் பில்லா படத்துக்கு பிறகு அஜித் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தியேட்டருக்கு வரவழைத்தது. தமிழ் சினிமாவில் எந்தவொரு டாப் ஹீரோவும் இந்த அளவுக்கு நெகட்டிவ் ரோலில் கெத்துக் காட்ட முடியாது என்கிற அளவுக்கு ஒரு பெஞ்ச் மார்க்கை அஜித் செட் செய்துவிட்டார்.

Mankatha Re Release Republic Day Ticket booking status details are here

அந்த படத்துக்குப் பிறகு அவரே குட் பேட் அக்லி உள்பட இந்தளவுக்கு ராவாக நடிக்கவில்லை. ஜனவரி மாதம் வெளியான தமிழ் படங்கள் எல்லாம் பெரியளவில் வசூல் வேட்டை நடத்தாத நிலையில், ஒரே காப்பான் மங்காத்தா தான் என தியேட்டர் ஓனர்கள் இறக்கினர்.

3 நாள் நல்ல வசூல்: மங்காத்தா திரைப்படம் முதல் 3 நாட்கள் நல்ல வசூலை தமிழ்நாட்டில் அள்ளியது. சுமார் 9.50 கோடி வசூல் தமிழ் நாட்டிலேயே வந்துள்ளதாகவும் 75 லட்சம் வசூல் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் திரையிட்டதன் மூலமாக வந்ததாக தகவல்கள் வெளியாகின. 10 கோடிக்கும் மேல் மங்காத்தா 3 நாட்களில் வசூல் அள்ளிய நிலையில், திங்கட்கிழமையும் ஒரு 3 கோடி ரூபாய் வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

குடியரசு தினத்துக்கு குறைவு தான்: ஆனால், குடியரசு தினமான இன்று புக் மை ஷோவில் சென்னையில் உள்ள தியேட்டர்களில் மங்காத்தா திரைப்படம் பெரிதாக பல இடங்களில் பச்சை நிறத்தில் தான் காட்சியளிக்கின்றன. மற்ற மாவட்டங்களில் நிலைமை ரொம்பவே டல் தான். ரோகிணி தியேட்டர், காசி தியேட்டர், சில பிவிஆர் தியேட்டர்களில் ஓரளவுக்கு ஆரஞ்சு நிறத்தில் டிக்கெட் புக்கிங் ஸ்டேட்டஸ் தென்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக திங்கட்கிழமை மங்காத்தா ரீ ரிலீஸ் திரைப்படமும் டல் அடிக்க தொடங்கி விட்டது. ஆனால், புதிய படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த குடியரசு தினத்தன்றும் மங்காத்தா தான் அதிக வசூல் அள்ளும் என தெரிகிறது. அதிகபட்சமாக 1.5 கோடி வரை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் காப்பாற்றுமா?: நாளை ஜனவரி 27ம் தேதி ஜனநாயகன் படத்துக்கான தீர்ப்பு சாதகமாக வந்து சென்சார் தரப்பும் மனது வைத்து தணிக்கைச் சான்றிதழ் வழங்கினால் தான் பிப்ரவரி மாதத்தை காப்பாற்ற முடியும் என்கிற நிலைமையில், கோடம்பாக்கமும் தமிழ்நாடு தியேட்டர்களும் உள்ளன. ஜனநாயகனையே காப்பாற்ற ஆள் இல்லையே என்பது தான் இதில் காலக்கொடுமை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X