இந்த வார புதுப்படங்களுக்கு மரண பயத்தை காட்டும் மங்காத்தா.. இப்போவே ஹவுஸ்ஃபுல் எல்லாம் ஆகுதே!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் எல்லாம் இந்த வாரம் திங்கட்கிழமை நாளில் ஒட்டுமொத்தமாக டல் அடித்து காணப்படுகிறது. ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஒரு சில இடங்களில் ஓரளவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த வாரம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய படங்கள் படையெடுக்க காத்திருக்கின்றன. ஆனால், அவை எல்லாத்துக்கும் அஜித் குமாரின் மங்காத்தா ரீ ரிலீஸ் படம் மரண பயத்தை காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mankatha re release ticket booking on fire and it turns nightmare to Draupathi 2 and Hotspot 2much
Photo Credit:

வரும் ஜனவரி 23ம் தேதி வெளியாகவுள்ள மங்காத்தா ரீ ரிலீஸ் திரைப்படம் இப்போதே சில தியேட்டர்களில் பல காட்சிகள் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டும் அளவுக்கு டிக்கெட் புக்கிங்கில் அசத்தி வருகிறது.

பராசக்தி கூட ஹவுஸ்ஃபுல் ஆகல: சிவகார்த்திகேயனின் புதிய படமான பராசக்தி படம் கூட முதல் நாளில் இந்த அளவுக்கு சில தியேட்டர்களில் கூட ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டப்படாமல் ஆரஞ்சு அலர்ட்டில் தான் 80 சதவீத இருக்கைகள் நிறைந்து வெளியானது. ஆனால், அஜித் குமாரின் மங்காத்தா ரீ ரிலீஸை ஏகே ரசிகர்கள் வேறமாறி கொண்டாட முடிவு செய்து டிக்கெட் முன்பதிவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

விலகிய தெறி: விஜய்யின் தெறி திரைப்படம் மங்காத்தாவுக்கு போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோகன். ஜி வைத்த கோரிக்கை காரணமாக தெறி ரீ ரிலீஸ் மீண்டும் போஸ்ட்போண்ட் ஆகிவிட்டது. அதனால், விஜய் - அஜித் கிளாஷ் இந்த வாரம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Mankatha re release ticket booking on fire and it turns nightmare to Draupathi 2 and Hotspot 2much
Photo Credit:

இத்தனை படங்களுக்கு மரணம் பயம்: இந்த வாரம் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரெளபதி 2, ஹாட்ஸ்பாட் 2 மச் என 2 இரண்டாம் பாகம் படங்கள் புதிதாக வெளியாக காத்திருக்கின்றன. மேலும், மாயபிம்பம் மற்றும் நிவின் பாலி நடித்துள்ள பேபி கேர்ள் உள்ளிட்ட படங்களும் இந்த வாரம் திரைக்கு வரும் நிலையில், அத்தனை படங்களுக்கும் மரண பயம் காட்டிக் கொண்டிருக்கிறது மங்காத்தா ரீ ரிலீஸ் என்கின்றனர். மங்காத்தா அளவுக்கு கூட ஹாட்ஸ்பாட் 2மச் மற்றும் திரெளபதி 2 படங்கள் அதிக தியேட்டர்களில் வெளியாகவில்லை என்றும் ஆரஞ்சு நிறத்தில் கூட இருக்கைகள் மாற வாய்ப்பில்லை என்றும் ஷாக் கொடுக்கின்றனர்.

கில்லி, படையப்பா வசூல் சாதனையை முறியடிக்குமா?: விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் வசூல் சாதனையை படையப்பா முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை முறியடிக்கவில்லை என்றும் ஆனால், சச்சின் சாதனையை படையப்பா ரீ ரிலீஸ் முறியடித்ததாக தியேட்டர் ஓனர்களே சிலர் பேட்டி அளித்தனர். இந்நிலையில், மங்காத்தா ரீ ரிலீஸ் திரைப்படம் வெளியாகி கில்லி மற்றும் படையப்பா ரீ ரிலீஸ் வசூல் சாதனையை முறியடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X