Ajith Vs Vijay: மங்காத்தாவுடன் ரீ ரிலீஸ் ஆகும் தெறி.. தேரை இழுத்து தெருவில் விடுகிறாரா தாணு?

சென்னை: இந்த பொங்கலை எப்படியாவது விஜயின் பொங்கலாக கொண்டாடி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது, ஜன நாயகன் சென்சார் விஷயம். இதனால் விஜய் நடித்த தெறி படத்தின் தயாரிப்பாளர் தாணு தெறி படத்தை ஜனவரி 15ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். இதை விஜய் ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் புதுப்படங்களில் ரிலீஸ்களாலும் அப்படங்களின் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாலும் தெறி படத்தின் ரீ ரிலீஸ் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் தாணு. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி அதாவது எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெறி படம் ரீ ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

இது ஒரு வகையில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றாலும், ஒரு புறம் பெரிய பஞ்சாயத்திற்கு வழிவகை செய்துள்ளது. அதாவது 23ஆம் தேதி அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜனவரி 1ஆம் தேதியே அறிவித்து, அதற்கான புரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதாவது பொங்கல் அன்று படத்தின் டிரைலரை வெளியிட்டு அசத்தியது. வரும் 23ஆம் தேதி மங்காத்தா ரீ ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Mankatha Vs Theri Re Release on January 23rd Again Ajith Vs Vijay Battle at Kollywood

இப்படியான நிலையில் தெறி படத்தின் ரீ ரிலீஸ் ஜனவரி 23 என்று தாணு அறிவித்துள்ளது, திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் அரசியலுக்கு சென்ற நிலையில் தற்போது, அஜித் படத்துடன் விஜய் படத்தை ரீ ரிலீஸ் செய்வது என்பது விஜய்க்கு அரசியல் ரீதியாக ஏதாவது பின்னடைவை ஏற்படுத்தலாம் என்ற பேச்சு ஓடிக் கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X