'வசனமாடா முக்கியம் படத்த பாருடா“… மொமண்ட் சொல்லி சிம்புவை கலாய்த்த வெங்கட்பிரபு!
சென்னை : வெங்கட்பிரபு தனது அடுத்தப்படத்திற்கு மன்மதலீலைனு பெயரு வைச்சாலும் வெச்சாரு, படம் வெளிவருவதற்கு முன்பாகவே மன்மத அம்பு பாய்ந்து வருகிறது.
இன்று இணையத்தில் பேசுபொருளாக இருப்பது மன்மதலீலை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பற்றிதான்.
பாக்யராஜ் மொழியில் சொல்லப்போனால் அந்த வீடியோவில் அவ்வளவு சமாச்சாரம் இருக்கு.

மன்மதலீலை
வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் மன்மத லீலை. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிளிம்ப்ஸ்
இந்நிலையில், இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நேற்று சிம்பு வெளியிட்டார். 40 வினாடி ஓடக்கூடிய அந்த வீடியோவின் நம்ம, அசோக் செல்வன் சம்யுக்தா ஹெக்டை மற்றும் ரியா சுமனுக்கு மாய்ந்து மாய்ந்து முத்தம் கொடுக்கிறார். சாதாரண மருத்துவ முத்தம்னு நினைச்சுக்க போறீங்க இது அடையும் தாண்ட பிரெஞ்ச் முத்தம்.

வசனமாடா முக்கியம்
அந்த கிளிம்ப்ஸை பார்த்த வெங்கட்பிரபுவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், இளசுகள் புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை நேற்று வெளியிட்ட சிம்பு, இந்த வீடியோ வேடிக்கையா இருக்கு என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு, வசனமாடா முக்கியம் படத்தை பாருடா என்று சிம்புவை கலாய்த்துள்ளார்.

முகம் சுளிக்காத
மற்றும் பல நெட்டிசன்ஸ், மாநாடு படத்தோட மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் துளிகூட ஆபாசம் கவர்ச்சி இல்லாதது தான் மன்மதலீலை படம் ஓகே ஆனா பெரிய நடிகர்களோட படத்தை இயக்கும் போது எல்லா வயதினரும் முகம் சுளிக்காத வகையில் தியேட்டருக்கு வருகிற மாதிரி படம் பண்ணுங்க என்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











