“மன்மத லீலை“ கல்யாணம் ஆனவங்க பார்க்க வேண்டிய படம்… பிரேம்ஜி மேடையில் ரகளை !
சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் மன்மத லீலை படத்தினை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு.

இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10வது படமாக உருவாகியுள்ள மன்மத லீலை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பிரேம்ஜி, மன்மத லீலை திரைப்படத்தில் நடிக்காமல் இசையமைத்து இருக்கிறேன். ரொம்ப ஜாலியான படம் கல்யாணம் ஆனவாங்க எல்லாம் பார்க்க வேண்டிய படம், கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டி கிட்ட மாட்டுனவுங்க கட்டாயம் பார்க்க வேண்டிய படம். அது மட்டும் இல்லாமல் சிங்கிளா இருக்கவங்களும் பார்க்க வேண்டிய படம் என்றார்.
பேஸ் புக் எல்லாம் வருவதற்கு முன்னாடி ஆர்குட்னு ஒன்று இருந்தது. அதுல எப்படி பேசி பெண்ணுங்கள உஷார் பண்ணலாம் என்பதை அசோக் இந்த படத்தில் நமக்கு சொல்லி தருவார் என்றார். யாருக்கு எல்லாம் கல்யாணம் ஆகி இருக்கோ அவங்க எல்லாம் படத்தை பாருங்க, பார்த்து நிறைய விஷயத்தை கத்துக்கோங்க என்று அசோக் செல்வனை வம்புக்கு இழுத்தார்.
இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் என 3 ஹீரோயின்கள் என்று கூறிவிட்டு மேடையில் இருந்த சம்யுக்தா ஹெக்டேவை பார்த்து ரொம்ப அழகா இருக்குறீங்க என்றார்.இதனாலதான் என் அண்ணன் ஷூட்டிங்கிற்கு வரவேண்டாம் என்று சொன்னான் போல என்று மேடையில் ரகளையாக பேசினார் பிரேம்ஜி.


Click it and Unblock the Notifications











