“மன்மத லீலை“ அடல்ட் படம் தான்… ஆனால் விரசம் இருக்காது… வெங்கட்பிரபு பேச்சு!

சென்னை : அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள மன்மத லீலை திரைப்படம். ஏப்ரல் 1ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வெங்கட் பிரபு, மன்மத லீலை அடல்ட் படம் தான், ஆனால், அதில் முகம் சுளிக்கும் அளவுக்க விரசம் இருக்காது என்று கூறியுள்ளார்.

அருமையான கதை

அருமையான கதை

இதில் பேசிய வெங்கட் பிரபு என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று யோசித்த போது மணிவண்ணன் இந்த அருமையான கதை எழுதி கொடுத்தார். முதல் முறையாக அடுத்தவரின் கதையை இயக்கி உள்ளேன். மணிவண்ணன் நிச்சயமாக பெரிய இடத்திற்கு செல்வார்.

மன்மத லீலை

மன்மத லீலை

அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதையை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் 3 பேருடன் இப்படம் குறித்து விவாதித்தேன் அனைவரும் ஒகே கூறிவிட்டதால் படத்தை இயக்கினேன். இதுபோன்ற ஒரு படத்தை இயக்குவதற்கு எனக்கு இம்ரேஷனாக இருந்தவர் பாக்யராஜ் சார் தான். இந்த காலத்தில் இப்படி ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று எடுத்த படம் தான் மன்மத லீலை.

ஜாலியான படம்

ஜாலியான படம்

ஒரு சாதாரண மனிதன் நான் வாழ்க்கையில் செய்யும் சிறிய தவறு அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை ஜாலியாக, காமெடியாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இது அடல்ட் படம் தான் இந்த படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க. ஆனால் படத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு விரசம் இருக்காது.18 வயசுக்கு மேற்பட்ட அனைவரும் படத்தை பார்க்கலாம் என்றார்.

கில்மா படம் இல்லை

இந்த படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு பலர் இது கில்மா படம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது அப்படிப்பட்ட படம் இல்ல, எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X