twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்தியமா.. மன்மதலீலை அந்தமாதிரி படம் இல்லை.. எஸ்.ஜே.சூர்யாவை கோர்த்து விட்ட வெங்கட் பிரபு!

    |

    சென்னை : மன்மத லீலை திரைப்படம் அந்த மாதிரி படம் இல்லை, என்னை நம்புங்கப்பா என்று கெஞ்சும் அளவுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் வெங்கட்பிரபு.

    ஆனால், டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் வெங்கட்பிரபுவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    மன்மதலீலைத் திரைப்படம் ஏப்ரல் 1ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

     “மன்மத லீலை“ கல்யாணம் ஆனவங்க பார்க்க வேண்டிய படம்… பிரேம்ஜி மேடையில் ரகளை ! “மன்மத லீலை“ கல்யாணம் ஆனவங்க பார்க்க வேண்டிய படம்… பிரேம்ஜி மேடையில் ரகளை !

    மன்மத லீலை.

    மன்மத லீலை.

    அசோக்செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் மன்மத லீலை. இத்திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    அந்த மாதிரி படம் இல்லை

    அந்த மாதிரி படம் இல்லை

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது இந்த டிரைலரைப் பார்த்த ரசிகர் இது அந்த மாதிரி படமா என கேட்டு வந்தனர். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெங்கட்பிரபு, ஒரு சாதாரண மனிதன் நான் வாழ்க்கையில் செய்யும் சிறிய தவறு அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை ஜாலியாக, காமெடியாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இது அடல்ட் படம் தான் இந்த படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்து இருக்காங்க. ஆனால் படத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு விரசம் இருக்காது என்று சத்தியம் செய்யும் அளவுக்கு பேசிஇருந்தார்.

    மாட்டிக் கொள்ளாதவரை

    மாட்டிக் கொள்ளாதவரை

    மன்மத லீலை டிரைலரில், மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே என்ற வாசகம்... இப்படிக்கு மாட்டிக் கொண்டவர் என்று டிரைலரில் இடம் பெற்றுள்ளது. மேலும், தண்ணி, தம்மு, லிப் லாக் காட்சி என ஏகத்திற்கும் கிளுகிளுப்பாக இருந்தது.

    வெங்கட்பிரபுவின் சேட்டைகள்

    வெங்கட்பிரபுவின் சேட்டைகள்

    வெங்கட்பிரபு என்னத்தான் சமாதானம் செய்தாலும், திருப்தி அடையாத ரசிகர்கள், உங்களிடமிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்று கருத்துக் கூறி வருகின்றனர். மேலும், ஆண்கள் என்றால் கேவளமானவர்களா என நெட்டிசன்கள் கேள்விக்கேட்டு வருகின்றனர். நெட்டிசன்களின் கமெண்டைப்பார்த்த எஸ்.ஜே.சூர்யா, சார் இது எல்லாம் வெங்கட்பிரபுவின் சேட்டைகள் என குறிப்பிட்டு இருந்தார்.

    கோர்த்துவிட்ட வெங்கட் பிரபு

    கோர்த்துவிட்ட வெங்கட் பிரபு

    இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, இந்த சேட்டைக்கான விதை நீங்க போட்டது எனக் குறிப்பிட்டு,லவ் யூ சார் எனப் பகிர்ந்துள்ளார். இந்த வம்பில் எஸ்.கே.சூர்யாவை நைசாக கோர்த்துவிட்டுள்ளார்.

    English summary
    Manmadha Leelai trailer controversial, fans trolled, மன்மத லீலை வெங்கட்பிரபுவை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துவருகின்றனர்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X