சரக்கு.. தம்மு.. லிப் லாக்.. மன்மத லீலை டிரைலர் ரிலீஸ்… ஆத்தாடி ஹாட் பீட் எகுருதே !
சென்னை : மன்மதலீலை திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி இளசுகளின் பேராதரவை பெற்றுள்ளது.
வெங்கட்பிரபுவின் 10வது படமாக மன்மதலீலை திரைப்படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு மற்றொரு பெண்ணிடம் ஏற்படும் காதலை சொல்லுவது தான் மன்மதலீலை திரைப்படத்தின் கதை. இப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் உருவாகி வருகிறது.

மன்மத லீலை
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கி உள்ள திரைப்படத்திற்கு மன்மத லீலை என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிளிம்ப்ஸ்
மன்மதலீலை திரைப்படம் கிளிம்ப்ஸ் வீடியோவை கடந்த மாதம் சிம்பு வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டை மற்றும் ரியா சுமனையும் மாறி மாறி முத்தமிடும் முத்த மழை பொழிந்து இருந்தார். இதைப்பார்த்து ரசிகர்கள் அப்படியே மிரண்டு போயினர்.

டிரைலர் வெளியானது
இந்நிலையில், மன்மதலீலை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அந்த டிரைலரில் , மாட்டிக்கொள்ளாத வரை எல்லா ஆண்களும் ராமர்களே.. மாட்டிக்கொண்டவர் என்ற வரிகளுடன் டிரைலர் தொடங்குகிறது. இதில், சரக்கு, தம்மு லிப் லாக் ஏகபோகமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த டிரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே இளசுகளின் பேராதரவுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏ சான்றிதழ்
மன்மதலீலை படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை திரையில் காண இளசுகள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











