மறைந்த லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செஞ்ச மன்மத லீலை டீம்... என்ன செஞ்சாங்க பாருங்க
சென்னை : இயக்குநர் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்திற்கு பிறகு அவர் இயக்கிவரும் படம் மன்மதலீலை.
Recommended Video
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநாடு படம்
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த படம் மாநாடு. இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ள நிலையில் படம் சிம்புவுக்கு மட்டுமின்றி வெங்கட்பிரபுவிற்கும் சிறப்பான ஏற்றத்தை தந்துள்ளது. அவருக்கு அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகி வருகின்றன.

மன்மத லீலை படம்
இந்நிலையில் அசோக் செல்வன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துவரும் மன்மத லீலை என்ற படத்தை தற்போது வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார்.

பிரேம்ஜி இசை
படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். பிரேம்ஜி இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்தப் படம் திருமணத்திற்கு பின்பு ஏற்படும் காதலை மையமாக கொண்டு ஜாலியாக எடுக்கப்பட்டுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சின்ன வீடு படத்தின் புதிய வெர்ஷன்
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளதாகவும் பாக்யராஜின் சின்ன வீடு படத்தின் புதிய வெர்ஷனாக படம் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை இந்தப் படம் தரும் என்றும் கூறியிருந்தார்.

கிளிம்ப்ஸ் வெளியிட திட்டம்
இந்நிலையில் படத்தின் கிளிம்ப்ஸ் இன்றைய தினம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர். ஏற்கனவே வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் வித்தியாசமான முறையில் அமைந்திருந்த நிலையில், இதற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டது.

வெளியாகாத கிளிம்ப்ஸ்
இந்நிலையில் லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி படத்தின் கிளிம்ப்ஸ் இன்றைய தினம் வெளியாகாது என்று படக்குழுவினர் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் எப்போது வெளியாகும் என்பது உள்ளிட்ட அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











