மன்னிப்பாயா பாடல் ஏ.ஆர் ரஹ்மான் சார் எனக்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!
சென்னை: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்பொழுது மூன்றாவது முறையாக சிம்புவுடன் இணைந்து வெந்து தனிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார்
முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிம்பு கிட்டத்தட்ட 50 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்ற மன்னிப்பாயா பாடல் ஏ.ஆர் ரஹ்மான் எனக்கு கிஃப்ட்டாக கொடுத்தது என கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

தனி ஸ்டைலில் படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன் காதல் படங்களை இயக்குவதில் ரொம்பவே ஸ்பெஷலிஸ்ட். இவரது படங்கள் அனைத்தும் ஒரு தனி விதமான ஸ்டைல்களில் இருக்கும் ஆக்சன் படங்கள் என்றாலும் சரி காதல் படங்கள் என்றாலும் சரி தனக்கே உரித்தான ஸ்டைலில் படங்களை இயக்கி வருவதால் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த நிலையில் சமீப காலமாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் கௌதம் வாசுதேவ் மேனன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததார்

வெந்து தணிந்தது காடு
அதைத் தொடர்ந்து இப்போது ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து செல்ஃபி என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ரோலில் நடித்து உள்ளார். இவ்வாறு இயக்குனர்,நடிகர் என பல பரிமாணங்களை எடுத்தாலும் இயக்குவதில் மிகவும் ஆர்வம் கொண்ட கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு

சிம்புவுடன் மீண்டும் கூட்டணி
சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான முதல் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக இந்தக் கூட்டணி இணையும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது மேலும் இந்த படத்திற்காக சிம்பு கிட்டத்தட்ட 50 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ஏ.ஆர் ரஹ்மான் கொடுத்த கிஃப்ட்
இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஏ.ஆர் ரஹ்மான் தான் அந்த படத்திற்கு இசையமைத்தார். மின்னலே படத்தில் இருந்து கவிஞர் தாமரையுடன் நான் பணியாற்றுவதால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியிருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் எனக்கே தெரியாமல் ஏ.ஆர் ரஹ்மான் கவிஞர் தாமரையை அழைத்து மன்னிப்பாயாக பாடலை கம்போஸ் செய்து ஸ்ரேயா கோஷலை பாட வைத்தார். ஒரு நாள் என்னை அழைத்து ஸ்டூடியோவிற்கு வரச்சொல்லி மன்னிப்பாயா பாடலை போட்டு காட்டி எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்து நினைத்து பார்க்க முடியாத ஒன்று என மன்னிப்பாயா பாடலுக்கு பின் உள்ள இந்த சுவாரஸ்ய நிகழ்வை கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











