மிகச்சிறந்த முடிவு.. மனம் திறந்து பாராட்டுகிறேன்.. விஜய் ஆண்டனிக்கு மனோபாலா நன்றி!

சென்னை: தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வருடா வருடம் அறிமுகமாகிறார்கள். அதில் சில நடிகர்கள் இசையமைப்பாளராக இருந்து நடிக்க வந்தவர்கள். அப்படி வந்து வெற்றி கண்ட நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி.

Recommended Video

மிகச்சிறந்த முடிவு.. மனம் திறந்து பாராட்டுகிறேன்.. விஜய் ஆண்டனிக்கு மனோபாலா நன்றி!

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் இசை ஆல்பங்கள் அனைத்தும் இளைஞர்களின் சொத்து. மெலோடி முதல் குத்து பாடல்கள் வரை இவர் அனைத்திலும் விளையாடியவர்.பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Mano Bala posted a Twitter video praising Vijay Antony

அதுமட்டுமின்றி பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணி புரிந்து தன் திறமையை நிரூபித்துள்ளார் விஜய் ஆண்டனி. இப்படி பல திறமைகளை வைத்துள்ள இவர் 'நான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக கால் வைத்தார். அந்த படத்தில் அவரின் அமைதியான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.பின் 'பிச்சைக்காரன்' போன்ற மிகப்பெரிய வெற்றி படத்தையும் கொடுத்தார்.

இதை தொடர்ந்து இசை, படத்தொகுப்பு, நடிகர், தயாரிப்பாளர் என பல பரிணாமங்களில் வலம் வர தொடங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது கொரோனாவால் பல தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர். அவர்களின் துயரை போக்கும் வகையில் தான் கடைசியாக நடித்த அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி ஆகிய மூன்று படங்களுக்கான சம்பளத்தை 25 சதவீதம் குறைத்து கொள்வதாக தானே முன்வந்து கூறினார்.

Mano Bala posted a Twitter video praising Vijay Antony

இதை தொடர்ந்து பல தயாரிப்பாளர்களும் பிரபலங்களும் இவரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் மனோபாலா விஜய் ஆண்டனியை பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது நீங்கள் எடுத்தது மிகச்சிறந்த முடிவு இதனால் பல தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். உங்களுக்கு மேலும் பல பட வாய்ப்புகள் அமைய வாழ்த்துகிறேன் என்று சொல்லி தன் வீடியோவை முடித்தார்.

Mano Bala posted a Twitter video praising Vijay Antony

இந்த இக்கட்டான சூழ்நிலையில் விஜய் ஆண்டனி எடுத்த முடிவு மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் திரைத்துறையினர் மட்டுமின்றி பல தரப்பட்ட மக்களும் அவரை பாராட்டிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X