இளையராஜா அப்படி சொன்னது எனக்கு எச்சரிக்கையாக தெரிந்தது... பாடகர் மனோ ஓபன் ஸ்டேட்மெண்ட்

சென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி பாடகராக வலம் வருபவர் மனோ.

1980, 90களில் இளையராஜாவின் ஃபேவரைட் பாடகராக மனோவும் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பாடகராக மட்டும் இல்லாமல் திறமையான நடிகராகவும் காணப்பட்ட மனோ, திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அதற்கான காரணம் குறித்து சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மனம் திறந்துள்ளார்.

 எஸ்பிபியின் ஜெராக்ஸ் மனோ

எஸ்பிபியின் ஜெராக்ஸ் மனோ

தமிழ்த் திரையிசை உலகில் பாடகர் மனோவும் மிக முக்கியமானவர். இளையராஜாவின் குழுவில் மனோவுக்கு எப்போதுமே ஸ்பெஷலான இடம் உண்டு. அதேபோல், மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடன்பிறவாத தம்பியாகவும் காணப்பட்டார். இந்த பந்தம் பாடல்கள் பாடுவதிலும் இருந்தது, அதாவது எஸ்பிபி பிஸியாக இருக்கும் போதும், வெளிநாடுகளில் இசைக் கச்சேரிக்காக சென்றிருந்த போதும் அவர் பாட வேண்டிய பாடல்களை அவருக்குப் பதிலாக பாடியது மனோ தான் என்பதை அவரே பெருமையாகக் கூறியுள்ளார். இளையராஜாவும் இந்த நினைவுகளை அதிகம் பகிர்ந்ததுண்டு. அதேநேரம் மனோவும் திறமயான பாடகர் என்பதில் சந்தேகமே கிடையாது.

 நடிப்பில் கவனம் செலுத்திய மனோ

நடிப்பில் கவனம் செலுத்திய மனோ

மனோ குரலில் வெளியான சில பாடல்களை எஸ்பிபி தான் பாடியுள்ளார் என ரசிகர்கள் நினைத்ததும் உண்டு. இந்நிலையில், 1980, 90களில் இளையராஜா உட்பட மற்ற மியூசிக் கம்போஸர்களுக்கு பிஸியாகப் பாடிக் கொண்டிருந்தார் மனோ. அப்போது சிங்கார வேலன் படத்தில் கமலுடன் இணைந்து முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஆக்டிங்கிலும் தனது திறமையை நிரூபித்த மனோ, இனிதொடர்ந்து நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டார்.

 இளையராஜாவின் எச்சரிக்கை

இளையராஜாவின் எச்சரிக்கை

இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவாவிற்கு அப்பாவாக காமெடி கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மனோவும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் சிங்காரவேலன் படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் இளையராஜா உங்களை நடிக்க வேண்டாம் என்று கூறினாரா என செய்தியாளர்கள் கேட்டனர்.

 பாடுவதற்காக நடிப்பை நிறுத்தினேன்

பாடுவதற்காக நடிப்பை நிறுத்தினேன்

அதற்கு பதில் அளித்த மனோ, நடிக்கச் சென்றால் உங்களுக்காக பாடல்கள் காத்திருக்காது என்று இளையராஜா கூறினார். காரணம், சிங்காரவேலன் ஷூட்டிங் நடந்த நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை படப்பிடிப்பு முடிந்த பின்னரே பாடி கொடுத்தேன். அதனால் தான் இளையராஜா இப்படி என்னிடம் கூறினார். அதனை நான் மிகப்பெரிய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டதாக கூறினார்.

 மீண்டும் நடிப்பில் கவனம்

மீண்டும் நடிப்பில் கவனம்

இதனையடுத்து தற்போது பாடுவதற்கு அதிகம் வாய்ப்பில்லை என்பதால் நடிக்கவந்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் படத்தில் மிர்ச்சி சிவாவின் தந்தையாக நடித்திருக்கிறார் மனோ. இந்தப் படத்தில் மனோவின் காமெடியான ஆக்டிங் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லரிலும் மனோவின் காமெடியை ரசிகர்கள் அதிகம் விரும்பியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X