அய்யோ ஆண்டவா.. இதோட நிறுத்திக்கோ.. டி.பி. கஜேந்திரன் மறைவு.. மனவேதனையில் மனோபாலா

சென்னை: தமிழ் சினிமாவின் இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான டி.பி. கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 68. டி.பி. கஜேந்திரன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது மனவேதனையை கொட்டித் தீர்த்துள்ளார்.

மறைந்த பழம்பெரும் இயக்குநர் விசுவின் உதவி இயக்குநராக இருந்தவர் டி.பி. கஜேந்திரன். பின்னர் விசு பாணியிலேயே பல குடும்ப நகைச்சுவை கதைகளை படமாக இயக்கி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியவர்.

சந்திரமுகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் டி.பி. கஜேந்திரன் மற்றும் மனோபாலா இணைந்து நடித்துள்ளனர்.

சிறுநீரக கோளாறு

சிறுநீரக கோளாறு

இயக்குநர் டி.பி. கஜேந்திரன் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோபாலா அஞ்சலி

மனோபாலா அஞ்சலி

டி.பி. கஜேந்திரனின் நண்பரும் இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகரான மனோபாலா டி.பி. கஜேந்திரன் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். டி.பி. கஜேந்திரனின் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய மனோபாலா அதன் பிறகு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் மனம் உருகி பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதோட நிறுத்திக்க ஆண்டவா

இதோட நிறுத்திக்க ஆண்டவா

கடந்த சில நாட்களாக தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உயிரிழந்து வருவது திரைத்துறையை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. ஜூடோ ரத்தினம், இயக்குநர் கே. விஸ்வநாத், வாணி ஜெயராம், டி.பி. கஜேந்திரன் என பல பிரபலங்கள் மண்ணை விட்டு மறைந்து செல்வது நடிகர் மனோபாலாவை மனதளவில் பாதித்துள்ளது. இதோட நிறுத்திக்க ஆண்டவா முடியல என்றே டி.பி. கஜேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பேசும் போது குமுறிவிட்டார்.

பாலா பாலான்னு உசுரவிடுவான்

பாலா பாலான்னு உசுரவிடுவான்

விசுவிடம் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே டி.பி. கஜேந்திரனை நன்றாகத் தெரியும். அவனை போல குடும்ப கதைகளை அழகாக கையாள தெரிந்த இயக்குநர் வெகு சிலர் மட்டும் தான். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் விஷ் பண்ணுவேன்.. பாலா பாலான்னு உசுரவிடுவான். இப்படி இவ்வளவு சீக்கிரத்தில் போய் சேருவான்னு எதிர்பார்க்கல.. சினிமா துறையையே கரம் வச்சு காலி பண்ணுவது போல அடுத்தடுத்த உயிரிழப்புகள் நடக்கின்றன தாங்க முடியல என மனோபாலா தனது ஒட்டுமொத்த வேதனையையும் கொட்டித் தீர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X