மறைந்த நடிகர் மனோபாலா எழுதிய உருக்கமான கடிதம்.. மனசுக்குள் இவ்வளவு சோகம் இருந்ததா?
சென்னை : மறைந்த நடிகர் மனோபாலா எழுதிய உருக்கமான கடிதம் தற்போது வெளியாகி பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நகைச்சுவை நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் உயிரிழந்தார்.
இவரின் மரணச்செய்தி தமிழ் திரையுலகினாரை சோகத்தில் ஆழ்த்தியது.

நகைச்சுவை நடிகர் : மனோபாலா இயக்குனர், தயாரிப்பாளர் பன்முகத் தன்மை கொண்டவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் நடிகராக இருந்தார். இவருக்கு ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.
பிரபலங்கள் இரங்கல் : கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. இவரின் மறைவுக்கு ரஜினிகாந்த், சத்யராஜ், கமல், பாரதிராஜா, கருணாஸ், ராதிகா சரத்குமார், இயக்குநர் விக்ரமன், சித்ரா லட்சுமணன், நடிகர் சார்லி ஆகியோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.
மனோ பாலாவின் உருக்கமான கடிதம் : இந்நிலையில், மனோ பாலா 40 ஆண்டுகளுக்கு முன் சித்ரா லட்சுமணனுக்கு தனது கைப்பட கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் டியர் சித்ரா, என்னமோ சட்டென்று ஒரு எண்ணம் ஏதோ எழுத வேண்டும் என்று நினைவுக்கு வந்தது நீங்கள்தான். தப்பா இது? ஒரு மன அரிப்பு, எங்கே எப்போது என்று அலைந்து கொண்டிருக்கிற மனதை சாந்தப்படுத்திக் கொள்ள ஒரு முயற்சி. நாம் அதிகம் பேசிக் கொண்டதில்லை.. பார்டர் தாண்டி நீங்களும் வந்ததில்லை, நானும் வந்ததில்லை. ஏன் தெரியாது.

ஏன் இப்படி ஆனது : இப்போது இது ஒரு முயற்சி சித்ரா, நான் தொழிலை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து வந்தவன் நான். ஆனால் இது என்ன சித்ரா எல்லாம் இடறல் மயம், ஏன் இப்படி ஆனது? எல்லா இடங்களிலும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்கள். நான் வரணும் சித்ரா கண்டிப்பா வரணும், என்னை பார்த்து சிரிப்பவர்களை பார்த்து நான் சிரிக்கும் காலம் வரும் சித்ரா.
மரண அவஸ்தை : இது ஒரு அக்கினி நெருப்பு அணைக்கவும் விடாமல் எரிந்து போகவும் விடாமல் மரண அவஸ்தை. எல்லாத்தையும் கண்ணில் காட்டி விட்டு இது உனக்கு கிடையாது என்ற சொல்வது போல இருக்கிறது என மனம் நொந்து மனோபாலா கடிதம் எழுதி உள்ளார். மனோபாலா, சித்ரா லட்சுமணன், மணிவண்ணன் போன்றோர் பாரதிராஜா திரைப்பட பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











