செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்
சென்னை: லிங்கா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மனோபாலா.
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி மும்பைக்கு கிளம்பும் முன்பு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவரை சந்தித்து பேசினார்.

தர்பாரை அடுத்து ரஜினி ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் லிங்கா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை மனோபாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மனோபாலா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரஜினி இரண்டு சேர்களை ஒன்றாக போட்டு அமர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அது ஏன் தலைவர் மட்டும் இரண்டு சேர்களில் உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மனோபாலா காக்கி அணிந்திருப்பதை பார்த்து என்ன சார், சௌகிதார் ஆகிவிட்டீர்களா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாயை பார்த்தாலோ, காவலாளியை பார்த்தாலோ சௌகிதார் என்று தான் மக்கள் அழைக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











