டிவி சீரியல்கள் அரைத்த மாவா? மிஸ்கினுக்கு பதிலடி தரும் மனோபாலா!

By Mayura Akilan

டிவி சீரியல்களை அரைத்தமாவு என்றும் டிவி நடிகர்கள் ஒரு டயலாக்கை ஒரு மாதத்திற்கு பேசுகிறவர்கள் என்றும் கூறி பரபரப்பை பற்றவைத்தார் இயக்குநர் மிஸ்கின்.

இந்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் மிஸ்கினை வறுத்து எடுத்துள்ளார் டிவி நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் இயக்குநர் மனோபாலா.

சினிமாவும், டிவியும் பிரிக்க முடியாத நிலையில் இருக்கும் இன்றைய சூழலில் டிவி சீரியல்களையும், அதில் நடிக்கும் நடிகர்களையும் மட்டம் தட்டி பேசியது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் சின்னத்திரை நடிகர்கள்.

புது சேனல்

புது சேனல்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புது சேனல் ஒன்றின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பிரபல திரைப்பட நடிகர்களும், நடிகையர்களும் பங்கேற்றனர். இயக்குநர்களும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

20 வருஷமாச்சே?

20 வருஷமாச்சே?

விழாவிற்கு வந்த மிஸ்கின் பேசிய போது, டிவி நடிகர்கள் ஒரு டயலாக்கை ஒரு மாதத்திற்கு பேசுவார்கள் என்றார். அதோடு விடாமல் சீரியல்கள் எல்லாம் அரைத்தமாவு என்று கூறிய மிஷ்கின், தான் டிவி பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறினார்.

கடுப்பான மனோபாலா

கடுப்பான மனோபாலா

இதைக்கேட்ட மனோபாலா நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிவிட்டார். டிவி நடிகர்களை மட்டம் தட்டிப் பேச மிஸ்கினுக்கு யோக்கியதை கிடையாது என்றும் கூறிய மனோபாலா, பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான்களே சீரியல் எடுக்கும் போது இவருக்கு என்ன வந்தது என்றும் கேட்டுள்ளார்?

சிவகார்த்திக்கேயன், விஜய் சேதுபதி

சிவகார்த்திக்கேயன், விஜய் சேதுபதி

இன்றைக்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் சிவகார்த்திக்கேயன், சந்தானம், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் டிவியில் இருந்து வந்தவர்கள்தான். வீட்டுக்கு வீடு டிவி இருக்கு, மிஸ்கின் டிவி பார்க்கலைன்னு யாரும் வருத்தப்படலை என்றும் கூறியுள்ளார் மனோபாலா.

ஓடாத படம்

ஓடாத படம்

முகமூடி படம் எடுத்த மிஸ்கின் எதுக்கு படம் எடுத்தேன்னு தெரியலைன்னு சொன்னார். இவரை நம்பி பணம் போட்டவங்களை சொல்லணும் என்றும் டென்சனாக பேசியுள்ளார் மனோபாலா.

ராஜகுமாரான் – தேவயானி

ராஜகுமாரான் – தேவயானி

சீரியல் பற்றி மிஸ்கின் கமெண்ட் அடித்த போது அருகில் இருந்தவர் நடிகை தேவயானி. இதுபற்றி கருத்து கூறும் அவரது கணவர் ராஜகுமாரன், இதை காமெடியாக எடுத்துக்கலாம் என்று கூறியுள்ளார்.

கோலங்கள் பிரபலம்

கோலங்கள் பிரபலம்

தேவயானிக்கு காதல் கோட்டை படம் கொடுத்த பிரபலத்தை விட கோலங்கள் சீரியல்தான் உலகம் முழுவதும் பிரபலம் கொடுத்தது. 74 நாடுகளில் இன்றைக்கு தேவயானிக்கு ரசிகர்கள் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் ராஜகுமாரான்.

கூலிங்கிளாஸ் இயக்குநர்

கூலிங்கிளாஸ் இயக்குநர்

அதோடு விட்டாரா ராஜகுமாரான், இரவு 12 மணிக்கு கூலிங்கிளாஸ் போடும் ஒரே இயக்குநர் மிஸ்கின் என்று கமென்ட் அடித்ததோடு, இவர் டைரக்டர் மன்சூர் அலிகான் என்றும் கூறியுள்ளார்.

வம்புக்கு இழுக்கிறாங்களே?

வம்புக்கு இழுக்கிறாங்களே?

ராஜகுமாரன் அடித்த கமென்டுக்கு மன்சூர் அலிகான் கொடுத்த பதில்தான் இதைவிட காமெடியானது. என்னை எதுக்கு ராஜகுமாரன் வம்புக்கு இழுக்கிறார்னு தெரியலையே? தேவயானியை கேட் ஏறி ஓடிவர வைத்தவர் இந்த ராஜகுமாரன். மூணு படம் பண்ணியவர் இப்போ நல்லா சேவகம் பண்றாருன்னு கேள்விப்பட்டேன்.

காசு செலவழிக்கிறார்

காசு செலவழிக்கிறார்

மனுசனுக்கு ஜாலி செய்ய நேரமிருக்கு. சினிமா இண்டஸ்ரியை வாழ வைக்க கைக்காசை செலவழிச்சி படம் எடுக்கிறார். லிப்ஸ்டிக் போடுறது அளவா இருக்காண்ணு பார்த்துட்டு பேசமா இருக்கலாம் என்றும் நக்கல் அடித்துள்ளார் மன்சூர் அலிகான்.

மிஸ்கின் கிடைக்கலையே?

மிஸ்கின் கிடைக்கலையே?

ஆனால் பிரச்சினைக்கு காரணகர்த்தாவான மிஸ்கினோ எதற்கும் பதில் தராமல் எஸ்கேப் ஆகிவிட்டார். டிவி தொடக்கவிழாவிற்குப் போய் எதற்கு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டாரோ தெரியலை என்கின்றனர் அவரது நண்பர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X