Manobala Son : அப்பாவுக்கு நீங்கதான் உயிர்… கண்கலங்கிய மனோபாலாவின் மகன்!
சென்னை : நகைச்சுவை நடிகர் மனோபாலா உயிரிழந்த நிலையில், அவரது மகன் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
1953ம் ஆண்டு டிசம்பர் 8ந் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் பிறந்தார் மனோபாலா.
மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும் ஹரீஷ் என்ற மகனும் உள்ளனர்.
நகைச்சுவை நடிகர் : தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலா.1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களை இயக்கிய மனோபாலா, 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

இன்று காலமானார் : கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்னை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அபுசாலி தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகன் கண்ணீர் பேட்டி: இந்நிலையில், மனோபாலாவின் மகனான ஹரீஷ் அளித்துள்ள பேட்டியில், அப்பாவிற்கு கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. செஸ்ட் பிரச்னை இருந்தது. இப்போது தான் நன்கு உடல்நிலை தேறி வந்து கொண்டுஇருந்தார். கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

நீங்கதான் உயிர் : அவருக்கு பிசியோ கொடுத்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் திடீரென்று இப்படி ஆகிவிட்டது. எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி நடந்துவிட்டது. அப்பாவுக்கு நீங்கதான் உயிர், அவரது இறுதிச்சடங்கை நல்ல முறையில் நடத்த ஒத்துழைப்பு கொடுங்கள். நாளை காலை 10 மணிக்கு அவரின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று கண்கலங்கி பேசினார்.
அமெரிக்காவில் வேலை : மனோபாலாவின் ஒரே மகனான ஹரீஷ் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். அவர் தன்னுடன் வேலை பார்த்த சக தோழியான பிரியா என்ற தமிழ் பெண்ணை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது ஹரீஷ் தன் மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மனோபாலாவுக்கு ஜனவரியில் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னைக்கு வந்து தனது அப்பாவை கவனித்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications