கங்குவா 1000 கோடி வரும்னு சொன்னவரா இப்படியொரு விமர்சனம் கொடுத்துருக்காரு?.. அப்போ அவ்ளோதானா?
சென்னை: அஜித் மற்றும் ரஜினிகாந்த் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்களை அளித்தும் விஜய் படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் வசூல் நிலவரத்தை கொடுத்தும் பிரபலமான மனோபாலா விஜயபாலன் கங்குவா படத்துக்கு கொடுத்துள்ள விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கங்குவா படத்தை பார்த்த தெலுங்கு, கேரளா மற்றும் இந்தி ரசிகர்களே படம் சூப்பர் என காலை முதல் சோஷியல் மீடியாவில் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கங்குவா படத்தை திடீரென மனோபாலா விஜயபாலன் புரமோட் செய்து வந்த நிலையில், அவரே இப்படியொரு மோசமான விமர்சனத்தை கொடுத்திருக்கிறாரே என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

27 ஆண்டுகள் சினிமாவில் பல புதிய முயற்சிகளை எடுத்து வரும் சூர்யா இந்த முறை தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு படம் கொடுக்கலாம் என கங்குவா படத்தில் நடித்துள்ள நிலையில், அதற்கு அதிகாலையிலேயே இடி போல இப்படியொரு விமர்சனம் வருமென ரசிகர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கலவையான விமர்சனங்கள்: கங்குவா படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் நெகட்டிவ் விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் குவியத் தொடங்கியுள்ளன. சமீப காலமாக வெளியாகும் பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கும் இதே போன்று தான் ரசிகர்களை குழப்பும் விதமாகவே கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. வேண்டுமென்றே படத்தை பாராட்டி விமர்சிக்கும் ஒரு கூட்டமும் அதே போல வேண்டா வெறுப்பாக படம் ஓடவே கூடாது என நினைத்து படத்தை பார்க்காமலே வன்மத்தை கக்கும் கூட்டமும் அதிகரித்துள்ளன.
மனோபாலா விஜயபாலன் புரமோஷன்: கடந்த சில நாட்களாக கங்குவா படத்திற்கு அதிகப்படியான டிக்கெட் பிரஷர் இருப்பதாகவும், தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி படம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த மனோபாலா விஜயபாலன் கங்குவா படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனம் ரசிகர்களை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளது.

ரொம்ப கஷ்டம்: கங்குவா திரைப்படத்தின் விஷுவல்ஸ் மற்றும் சூர்யாவின் நடிப்பு அட்டகாசம் என பாராட்டி வரும் அனைவரும் படத்தின் கதை குறித்து பாசிட்டிவான கருத்துக்களை சொல்லாமல் கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், கங்குவா படத்தைக் குறிப்பிடாமல் திடீரென Tough Luck என மனோபாலா விஜயபாலன் மனக்கஷ்டத்துடன் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
கடுப்பாகும் தமிழ்நாட்டு ரசிகர்கள்: ஒவ்வொரு படமும் மற்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே வெளியாகி இப்படி விமர்சனங்களும் வெளியாகி விடுகின்றன. படத்தை முதல் ஷோ பார்த்து என்ஜாய் பண்ணக் கூட முடியல. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் சிறப்புக் காட்சி என்பது ரொம்பவே டூமச் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கடுப்பை கொட்டி வருகின்றனர்.
ஒரிஜினல் விமர்சனம்: காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் கங்குவா படம் திரையிடப்படும் நிலையில், கூடிய சீக்கிரமே கங்குவா படம் குறித்த ஒரிஜினல் விமர்சனம் வந்துவிடும் என்றும் அதுவரை மற்ற மாநில ரசிகர்கள் விமர்சனங்களையோ, விமர்சகர்கள் என்கிற பெயரில் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுப்பவர்களின் கருத்துக்களையோ பார்க்கக் கூடாது என்றும் சூர்யா ரசிகர்கள் உறுதியுடன் கங்குவா படம் வெற்றிப்படமாக மாறும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











