தளபதி 68 அன் அஃபிஷியல் டைட்டிலை கூட விடமாட்றாங்களே.. மனோபாலா விஜயபாலன் ஸ்டார்ட் பண்ணிட்டாரு!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் என சோஷியல் மீடியாவில் வலம் வரும் அந்த டைட்டில் மீதும் வன்மத்தை கக்க ஆரம்பித்து விட்டனர்.

நடிகர் விஜய் பற்றி தொடர்ந்து சோஷியல் மீடியாவில் நெகட்டிவிட்டி கருத்துக்களை பரப்பி வரும் மனோபாலா விஜயபாலன் இந்த அன் அஃபிஷியல் டைட்டிலை கூட விடாமல் ட்ரோல் செய்யத் தொடங்கி விட்டார்.

Manobala Vijayabalan trolls Thalapathy 68 unofficial title Boss

ஒருவேளை இதுதான் ரியல் டைட்டிலா இருந்தா அதை உடனடியாக படக்குழுவினர் மாற்றி விட வேண்டும் என்பதற்காக இப்பவே இப்படி தீவிரமாக உழைக்க ஆரம்பித்து விட்டாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

தளபதி 68 டைட்டில் என்ன?: இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ படங்களில் நடித்த நடிகர் விஜய் அடுத்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக கொடுக்க கடுமையான உழைப்பை கொட்டி வருகிறார். வரும் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு தளபதி 68 டைட்டில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்திற்கு 'பாஸ்' என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சோஷியல் மீடியாவில் ஃபேன் மேட் போஸ்டர்கள் எல்லாம் ரெடி பண்ணி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பாஸ் லாஸ்: சிவாஜி தி பாஸ் படத்தில் இருந்து விஜய் ஆட்டையப்போட்டு விட்டார் என்றும் அக்‌ஷய் குமார் படத்தின் டைட்டில் பாஸ் என்றும் ட்ரோல்கள் குவியத் தொடங்கிய நிலையில், வாரிசு படத்திலேயே பாஸ் ரிட்டர்ன்ஸ் என்கிற வாசகம் இடம் பெற்றிருக்கும் என்பதை விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், மனோபாலா விஜயபாலன் ஒருபடி மேலே சென்று அன் அஃபிஷியல் டைட்டிலுக்கே பாஸ் - லாஸ் என ட்வீட் போட்டு தனது வேலையை ஆரம்பித்து விட்டார்.

வெற்றிவிழாவை தாண்டி போகுமே: தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகி அந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு அது வெற்றி விழா கொண்டாடினாலும் பாஸ் - லாஸ் என்றே மனோபாலா போட்டு வருவாரே என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ டைட்டில் வெளியாகும் என்றும் அதுவரை அமைதி காப்போம் என விஜய் ரசிகர்கள் வெயிட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X