விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் மனோபாலா மற்றும் ப்ளூ சட்டை மாறன்.. சன் பிக்சர்ஸ் வாய் திறக்குமா?
சென்னை: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் என்கிற பெயரில் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இருப்பது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.
ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக இரண்டு நாட்களில் பீஸ்ட் படம் 100 கோடி வசூல் செய்துள்ளது என பல டிராக்கர்கள் போட்டுள்ளனர்.
மறு பக்கம் மனோபாலா விஜயன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் கேஜிஎஃப் 2 பீஸ்ட் வசூலை சூறையாடி விட்டதாக தொடர்ந்து விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

நெகட்டிவ் விமர்சனங்கள்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கும் ஒட்டுமொத்தமாகவே நெகட்டிவ் விமர்சனங்கள் தான் குவிந்துள்ளன. வலிமை பட ரிலீஸின் போது விஜய் ரசிகர்கள் வச்சு செய்த நிலையில், பீஸ்ட் பட ரிலீஸின் போது அஜித் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து வெறுப்பேற்றி வருகின்றனர்.

டிராக்கர்கள் தொல்லை
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து தயாரிப்பாளர்கள் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், அதற்கு பதிலாக இங்கே ஏகப்பட்ட சினிமா டிராக்கர்கள் ஆளுக்கொரு பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களை சொல்லி ரசிகர்களை மேலும், வெறுப்பேற்றி வருகின்றனர். இவர்கள் சொல்லும் பாக்ஸ் ஆபிஸ் நம்பரை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர்.

மனோபாலா விஜயன்
வலிமை படத்தின் வசூலுக்கு கடைசி வரை முட்டுக் கொடுத்து வந்த மனோபாலா விஜயன் முதல் நாளில் இருந்தே விஜய்யின் பீஸ்ட் படம் டிசாஸ்டர் என விஜய் ரசிகர்களை ரொம்பவே வெறுப்பேற்றி வருகிறார். மேலும், தியேட்டர்கள் எல்லாம் காலியாக உள்ளது. நான் சொல்வது தான் உண்மை என ஸ்க்ரீன் ஷாட்களையும் போட்டு கடுப்பை கிளப்பி உள்ளார்.

பீஸ்ட் டிசாஸ்டர்
பீஸ்ட் படம் முதல் நாளில் 72.67 கோடி வசூல் செய்ததாகவும், இரண்டாம் நாளில் வெறும் 24.18 கோடி தான் வசூல் செய்ததாகவும் பீஸ்ட் இன்னமும் 100 கோடி வசூலை எட்டவில்லை என்றும் ஒட்டுமொத்தமாக உலகளவில் 96.85 கோடி வசூல் பெற்று டிசாஸ்டர் ஆக மாறி உள்ளது என மறுபடி மறுபடி பீஸ்ட் வசூல் குறித்து போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

கண்டபடி திட்டும் ரசிகர்கள்
கேஜிஎஃப் 2 மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து புகழ்ந்து பீஸ்ட் படத்தை டிசாஸ்டர் என சொல்லி வரும் மனோபாலா விஜயனை விஜய் ரசிகர்கள் கண்டபடி கழுவி ஊற்றி திட்டி வருகின்றனர். மேலும், சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இவர்கள் வாயை அடைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Recommended Video

இனிமே பயங்கரமா இருக்கும்
மனோபாலா விஜயன் ஒரு பக்கம் விஜய் ரசிகர்களை பந்தாடி வருகிறார் என்றால், இன்னொரு பக்கம் ப்ளூ சட்டை மாறனும் விஜய் ரசிகர்களை துவைத்து எடுத்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இடம் இருந்து தப்பித்த விஜய் ரஜினிகாந்தை கோர்த்து விட்டு விட்டார் என்பதை குறிக்கும் விதமாக பயமா இருக்கா.. இனிமே பயங்கரமா இருக்கும் என மீம் போட்டு வெறுப்பை சம்பாதித்து வருகிறார். வலிமை மற்றும் பீஸ்ட் என தொடர்ந்து ரசிகர்களுடன் சண்டைப் போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications