புரோக்கர் வேலை பார்க்குற.. எல்லை மீறிய சண்டை.. பிரசாந்த் vs மனோபாலா திடீர் மோதல்.. என்ன ஆச்சு?

சென்னை: சினிமா விமர்சகர்கள் என்றும் டிராக்கர்கள் என்றும் சோஷியல் மீடியாவில் வலம் வருபவர்கள் சமீப காலமாக எல்லை மீறிய மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய்க்கு ஆதரவாக அஜித் படத்தை தர குறைவாக விமர்சித்து பேசுகிறார்கள் என்றும் இஷ்டத்துக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலை சொல்லி சம்பாதிக்கின்றனர் என்றும் பெரிய பஞ்சாயத்தே நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று யூடியூப் விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் மற்றும் டிராக்கர் மனோபாலா இடையே கடும் வார்த்தை மோதல்கள் நடந்துள்ளன.

வலிமை வந்ததில் இருந்தே

வலிமை வந்ததில் இருந்தே

வலிமை படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே சமூக வலைதளங்களில் டிராக்கர்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள் மத்தியில் கடும் சண்டையே நடைபெற்று வருகிறது. சினிமா பற்றிய அப்டேட்களை கொடுத்து வரும் இந்த ப்ளூ டிக் பிரபலங்கள் ஒரு சார்பாக நடந்து கொள்வதாக ரசிகர்களும் விளாசி வருகின்றனர். வலிமை படத்துக்கு யூடியூப் விமர்சகர்கள் அனைவரும் எல்லை மீறிய வெறுப்பு உணர்வை உமிழ்ந்தது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்கின்றனர்.

வசூல் நிலவரம்

வசூல் நிலவரம்

மனோபாலா தொடர்ந்து வலிமை, எதற்கும் துணிந்தவன் மற்றும் ராதே ஷ்யாம் என சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் நிலவரங்களை பதிவிட்டு வருகிறார். பொய்யான வசூல் நிலவரத்தை மனோபாலா தருகிறார் என ப்ளூ சட்டை மாறன் மற்றும் இட்டிஸ் பிரசாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். ஆன்டி இண்டியன் திரைப்படம் டோட்டல் வாஷ் அவுட் என மனோபாலா போட்ட நெகட்டிவ் ட்வீட் காரணமாக ப்ளூ சட்டை மாறனுக்கும் இவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

மனோபாலா vs பிரசாந்த்

மனோபாலா vs பிரசாந்த்

இந்நிலையில், திடீரென பிரசாந்த் மற்றும் மனோபாலா இடையே மிகப்பெரிய சண்டையே சோஷியல் மீடியாவில் வெடித்ததை பார்த்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொழில் போட்டியை தாண்டி தரக்குறைவான வார்த்தை மோதல்களில் இருவருமே ஈடுபட்டது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பீஸ்ட் விமர்சனம்

பீஸ்ட் விமர்சனம்

வலிமை விமர்சனத்தை கழுவி ஊற்றிய பிரசாந்த், ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்கள் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு வேற லெவலில் பாராட்டி விமர்சனம் செய்வார்கள் என்றும் அதையும் தாண்டி கன்னட திரைப்படமான கேஜிஎஃப் திரைப்படம் நல்லாவே இல்லை எனக்கூறி பீஸ்ட் படத்துக்காக வேலை செய்வார்கள் என அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்த நிலையில், கடுப்பான பிரசாந்த் போட்ட ட்வீட் தான் மனோபாலாவை கோபமாக்கியது என்கின்றனர். கேஜிஎஃப் கிளாஷுக்கு பயந்து விஜய் பீஸ்ட் படத்தை முன்னதாக வெளியிடுகிறார் என மனோபாலா போட்ட ட்வீட்டுக்கும் ஆபாச வார்த்தையில் திட்டி ட்வீட் போட்டு இருந்தர் பிரசாந்த்.

ஷிட்டி கேம்ஸ்

ஷிட்டி கேம்ஸ்

நான் ஒன்றும் மனோபாலா விஜயன் மாதிரி ஷிட்டி கேம்ஸ் விளையாடி ஃபாலோயர்களை ஏற்ற நினைக்க மாட்டேன் என தனது கேஜிஎஃப் பட விமர்சனம் குறித்து எழுந்த விமர்சனத்துக்கு பிரசாந்த் போட்ட ட்வீட் தான் மனோபாலாவுக்கும் இவருக்கும் இடையே மிகப்பெரிய சண்டை வெடிக்க காரணமாக அமைந்தது என்கின்றனர்.

புரோக்கர் வேலை பார்க்குற

புரோக்கர் வேலை பார்க்குற

புதிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்களை சொல்லி வரும் மனோபாலாவை பிரசாந்த் அசிங்கமாக திட்டி சீண்டிய நிலையில், ப்ரூஃப் கே ப்ரூஃப் கேட்குற வெண்ண.. இந்தா நீ ப்ரோக்கர் வேல பார்த்ததுக்கு ப்ரூஃப். உனக்கு மட்டும் தான் வாய் இருக்கா அசிங்கமா பேச.. டேய் பொம்பள பொறுக்கி அழுவாத போய் சரக்கடிச்சிட்டு தூங்கு என போஸ்ட் போட்டுள்ளார்.

ரொம்ப அசிங்கம்

ரொம்ப அசிங்கம்

பின்னர் என் வேலையை நான் பார்க்குறேன்.. குறுக்க வராத.. என டெலிட் செய்து விட்டார் என ஸ்க்ரீன் ஷாட்களை எடுத்த்ப் போட்டு அஜித் ரசிகர்கள் பிரசாந்தை கலாய்த்து வருகின்றனர். மனோபாலா இதனை போடவில்லை என்றும் எடிட் செய்யப்பட்டது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சந்தானத்தின் டிக்கிலோனா மற்றும் சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பிரசாந்த். சினிமாவில் இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் இப்படி அசிங்கமாக சண்டைப் போட்டுக் கொண்டால் சிக்கல் தான் என நியூட்ரல் ஃபேன்ஸ் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X