அழாதீங்க அச்சும்மா.. அது உங்களுக்கு செட்டாகாது.. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.. மனோபாலா ஆறுதல்!
சென்னை: பிரபல தொகுப்பாளினியும் பிக்பாஸ் பிரபலமுமான அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை சீக்கிரம் குணமாகிவிடும் என நடிகர் மனோபாலா ஆறுதல் கூறி தேற்றியுள்ளார்.
Recommended Video
மூளையில் திரவ கசிவு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அர்ச்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் குணமாகி வீடு திரும்புவீர்கள் என நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.

மூளையில் பிரச்சனை
ஜி தமிழில் தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டிருந்த அர்ச்சனா விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டார். பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவுக்கு திடீரென மூளையில் திரவ கசிவு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை
மருத்துவமனையில் அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், இன்னும் ஒரு வார காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மகள் ஸாரா அர்ச்சனாவின் உடல் நலம் குறித்த தகவல்களை ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பார் என அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்தார்.

அழாதீங்க அச்சும்மா
நாங்க எல்லாம் இருக்கோம் அர்ச்சும்மா.. கடவுள் சாய்ராம் இருக்காரு.. உங்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியா முடிந்தது என கேள்விப் பட்டேன். அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்பட்டு நீங்கள் அழுதீர்கள் எனவும் கேள்விப் பட்டேன். அழ வேண்டாம். அது உங்களுக்கு செட்டாகாது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவீர்கள் என நடிகர் மனோபாலா ஆறுதல் கூறியுள்ளார்.

சனம் ஆறுதல்
அர்ச்சனா அக்கா சீக்கிரமே குணமாகி வீடு திரும்புவீங்க.. உங்களுக்கு அறுவை சிகிச்சை ஏற்பட்டதாக இப்போதான் கேள்விப் பட்டேன் என நடிகையும் பிக் பாஸ் சக போட்டியாளருமான சனம் ஷெட்டி அர்ச்சனாவுக்கு சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பிரார்த்தனை
அன்பு தான் ஜெயிக்கும் என பிக் பாஸில் கடைசி வரை முழங்கிய அர்ச்சனாவுக்கு இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











