காமெடியில் இது வேற வகையாம்..மீண்டும் மிரட்ட வரும் பேய்ப்படம்.. இதுக்கு ஏன் இப்படியொரு டைட்டில்?
சென்னை: மனோசித்ரா நடித்துள்ள ஹாரார் காமெடி படத்துக்கு குருஜியும் கும்தலக்கா பேயும் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
தமிழில் மீரா கதிரவன் இயக்கிய அவள் பெயர் தமிழரசி என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், நந்தகி.

பின்னர் தனது பெயரை மனோசித்ரா என்று மாற்றிக்கொண்டு, நீர்ப்பறவை, வீரம், நேற்று இன்று உட்பட சில படங்களில் நடித்தார்.
தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ள மனோசித்ரா, இப்போது நடித்துள்ள படத்துக்கு 'குருஜியும் கும்தலக்கா பேயும்' என்று டைட்டில் வைத்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் ஹாரார் காமெடி படங்கள் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தன. இடையில் பேய்ப் படங்கள் குறைந்திருந்தது.
இப்போது மீண்டும் சில பேய் படங்கள் தயாரிப்பில் உள்ளன. அதில் ஒன்று இது. இந்தப் படத்தில் மனோசித்ரா தவிர ஏராளமான புதுமுகங்கள் நடித்துள்ளனர். துரை சந்தோஷ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இந்திரஜித் இசை அமைத்துள்ளார். பழனிவேல் சுப்ரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆரோவ் 8 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
இந்த லாக்டவுன் நேரத்தில் இந்தப் படத்தின் ஸ்னீக் பிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 'இது காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள பேய் படம். வழக்கமான பேய்ப் படமாக இது இருக்காது. ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. லாக்டவுன் முடிந்ததும் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும்' என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











