புஷ்பா 2வில் எத்தனை வில்லன் தான்ப்பா.. அந்த பாலிவுட் நடிகரையும் களமிறக்க பலே திட்டம் நடக்குதாம்!

ஹைதராபாத்: புஷ்பா முதல் பாகமே பாலிவுட் முதல் கோலிவுட் வரை மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்திய நிலையில், அதன் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பகத் ஃபாசில், விஜய்சேதுபதி என அல்லு அர்ஜுனுக்கு எதிரான வில்லன்களின் எண்ணிக்கை ஏறிக் கொண்டே போகும் நிலையில், புதிதாக பாலிவுட் ஹீரோவையும் களமிறக்க திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் மட்டும் உறுதியானால், புஷ்பா 2வின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸே விண்ணை பிளக்கும் என்கின்றனர்.

புஷ்பா 3ம் பாகம் வரை

புஷ்பா 3ம் பாகம் வரை

கேஜிஎஃப் 2 முடிந்து கேஜிஎஃப் 3க்கு லீடு கொடுத்த நிலையில், புஷ்பா திரைப்படமும் 3ம் பாகம் வரை செல்லப் போகிறது என அதில் வில்லனாக நடித்து வரும் பகத் ஃபாசில் சமீபத்தில் லீக் செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. முன்னதாக பகத் ஃபாசில் வெளியேறி விட்டார் என்றும் அவருக்கு பதில் தான் விஜய்சேதுபதி வரப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விக்ரம் காம்போ

விக்ரம் காம்போ

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் பகத் ஃபாசில் மற்றும் விஜய்சேதுபதி என விக்ரம் படத்தின் காம்போ அப்படியே மீண்டும் களமிறங்குகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் இணைந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கப் போகின்றனர். முதல் பாகத்தை விட இன்னமும் படு ராவாக பல காட்சிகளை வைக்க இயக்குநர் திட்டமிட்டு இருக்கிறார்.

தி ஃபேமிலி மேன் கூட்டணி

தி ஃபேமிலி மேன் கூட்டணி

ஏற்கனவே புஷ்பா படத்தில் சமந்தா ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு அந்த ஆட்டம் போட்டிருந்தார். இரண்டாம் பாகத்தில் இன்னொரு ஐட்டம் பாடல் மற்றும் சில காட்சிகளும் சமந்தாவுக்கு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ராஷ்மிகா கொல்லப்படுவார் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், சமந்தா உடன் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் நடித்த இன்னொரு பிரபலமும் இந்த படத்தில் நடிக்கப் போகிறாராம்.

மனோஜ் பாஜ்பாய்

மனோஜ் பாஜ்பாய்

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த மனோஜ் பாஜ்பாய் தான் புஷ்பா 2 படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் என்கிற லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் விஜய்சேதுபதி நடிக்கும் கதாபாத்திரத்தில் இந்திக்கு மட்டும் மனோஜ் பாஜ்பாயை நடிக்க வைக்க இயக்குநர் பிளான் போட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Manoj Bharathirajaவிற்கு நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு | Filmibeat Tamil
மூன்றாவது முறை

மூன்றாவது முறை

ஏற்கனவே அல்லு அர்ஜுனின் வேதம் படத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளார். அந்த படம் தமிழில் வானம் என சிம்பு நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகு ஹேப்பி எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்துள்ள நிலையில், புஷ்பா 2வில் அவர் நடித்தால் 3வது முறையாக இவர்கள் இருவரும் கூட்டணி அமையும் என கூறுகின்றனர். 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புஷ்பா 2விற்கு கடும் உழைப்பைக் கொட்டி வருகிறாராம் அல்லு அர்ஜுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X