கொரோனா லாக்டவுன் திருமணம்.. நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் இயக்குனரை மணந்த பிரபல நடிகை!

By

சென்னை: இயக்குனரை காதலித்து வந்த பிரபல நடிகை, அவரை சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

Recommended Video

KPY Yogi Marriage Video • Lock Down Love

பிரவீன் குமார், சனம் ஷெட்டி, ஷாலினி பாலசரவணன், அருள்தாஸ் உள்பட பலர் நடித்த படம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.

அபி என்ற ஏ.எல்.அபநிந்திரன் இயக்கிய இந்த காமெடி படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.

ஷாலினி வட்னிகட்டி

ஷாலினி வட்னிகட்டி

இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தவர், நடிகை ஷாலினி வட்னிகட்டி. இவர் கன்னடத்தில் பிளஸ் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். ராஜாரு, மிஸ்டர் பெர்பக்ட் உள்பட சில படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்குக்கு வந்தார். யுரேகா என்ற படம் மூலம் அங்கு அறிமுகமான இவர், அடுத்து கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா, பானுமதி ராமகிருஷ்ணா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனருடன் காதல்

இயக்குனருடன் காதல்

கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா படம் கடந்த மாதம் ஒடிடியில் வெளியானது. இப்போது, 28 டிகிரி சி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். கன்னட சீரியலிலும் நடித்துள்ள இவர், கடந்த மாதம், இயக்குனர் ஒருவரை தான் காதலித்து வருவதாகவும் எங்கள் திருமணம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இயக்குனர் மனோஜ் பீதா

இயக்குனர் மனோஜ் பீதா

அவர் இயக்குனர் மனோஜ் பீதா என்பது பின்னர் தெரிய வந்தது. மனோஜ் பீதா, தமிழில் வஞ்சகர் உலகம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் குரு சோமசுந்தரம், விசாகன் வணங்காமுடி, அனிஷா அம்புரோஸ், சாந்தினி தமிழரசன் உள்பட பலர் நடித்திருந்தனர். கடந்த 2018 ஆம் வருடம் ரிலீஸ் ஆன இந்தப் படத்துக்குப் பிறகு அவர் வேறு படம் இயக்கவில்லை.

லாக்டவுனில் திருமணம்

லாக்டவுனில் திருமணம்

இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் மனோஜ் பீதா, நடிகை ஷாலினி வட்னிகட்டி காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கொரோனா லாக்டவுனில் அவர்கள் திருமணம் நேற்று எளிமையாக நடந்துள்ளது.

நெருங்கிய சொந்தங்கள்

நெருங்கிய சொந்தங்கள்

கொரோனா வேகமாக பரவி வருவதால், இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இத்தகவலை நேற்று மாலை அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் திருமண போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X