என் நண்பன் பாரதிக்கு இப்படியொரு சோகம் வந்திருக்கக் கூடாது.. இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோ

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மூத்த மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்தது தமிழ் திரையுலகை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 48 வயதில் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா தனது பெற்றோர்களையும் மனைவியையும் இரு மகள்களையும் விட்டுச் சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கராத்தே வீரர் ஷிஹான் ஹூசைனி நேற்று நள்ளிரவில் காலமான சோகம் மறைவதற்கும் பாரதிராஜாவின் மகன் மனோஜின் மரணம் தமிழ் திரையுலகினரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு இளையராஜா தனது மகள் பவதாரிணியை இழந்த துக்கம் அவரை பல நாட்கள் தூங்கவிடாமல் செய்தது.

Manoj Bharathiraja passes away and Ilaiyaraaja shared heartfelt condolence via video

இந்நிலையில், இளையராஜாவின் ஆருயிர் நண்பரான பாரதிராஜாவின் மகன் உயிரிழந்த செய்தியை அறிந்ததுமே முதல் ஆளாக இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார் இளையராஜா.

மனோஜ் பாரதிராஜா மரணம்: பாரதிராஜாவின் மூத்த மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் வாடி வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மனோஜ் பாரதிராஜா உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தி கேட்டு இயக்குநர் பாரதிராஜா காரில் வரும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. திரை பிரபலங்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா இரங்கல் வீடியோ: என்னுடைய நண்பன் பாரதியின் மகன் மனோஜ் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். பாரதிக்கு இப்படியொரு சோகம் நேர்ந்திருக்கக் கூடாது. ஆனால், உயிரிழப்புகளை தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லையே. என் நண்பனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. மனோஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இரங்கல்: "ஆறுதலே சொல்ல முடியாத அளவுக்கு பெரும் சோகத்தை
இந்த மரணம் செய்யக்கூடாது, இளவயது பிரிவு
மரணம் என்ற ஒன்று செத்து விட வேண்டும் எனத் தோன்றுகிறது.

இயல்பிலேயே பெரும் பாசத்துக்கும் நேசத்திற்கும் உரியவர் சகோதரர் மனோஜ் அவர்கள், அவர்களின் மறைவு
பெரும் அதிர்ச்சி,
இதய அஞ்சலி!

மனோஜ் அவர்களின் துணைவியார் குழந்தைகள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்,
அவர் தந்தையார் இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை." என இயக்குநர் சீனு ராமசாமி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X