Manoj Bharathiraja: மனோஜ்க்கு கால்கள் பிடித்துவிட்ட பாரதிராஜா.. உடனே மனோஜ் என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக உள்ளார். அவரது மகன் மனோஜ் பாரதிராஜா, இன்று அதாவது மார்ச் 25ஆம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். அவருக்கு வயது, 48. இவரது மறைவுச் செய்தி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பழைய பேட்டி ஒன்றில், மனோஜ், தனக்கு தனது அப்பா பாரதிராஜா கால் பிடித்து விட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.

மனோஜ் பாரதிராஜா அளித்த பழைய பேட்டியில், " அப்பா என் மேல் எந்த அளவுக்கு பாசமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு கண்டிப்பானவர். பள்ளிக் காலத்தில் அவரிடத்தில் அடி எல்லாம் வாங்கி இருக்கிறேன். அப்பாவுக்கு என்னை நடிகராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எனக்கு அதில் இஷ்டமே இல்லை. கொஞ்சம் கூட இஷ்டம் இல்லாமல் தான் தாஜ்மஹால் படத்தில் நடிக்க வந்தேன்.

Manoj Bharathiraja Shares Emotional Experience With Bharathiraja Throwback Interview

மன்னிப்பு: இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அவர் என்னைத் திட்டி விட்டார். ஆனால் நான் தொடர்ந்து அவரிடத்தில் நான் நடிக்க வரவில்லை, எனக்கு நடிப்பில் இஷ்டமில்லை என சொல்லிக் கொண்டே இருந்தேன்.ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நான் கோபப்பட்டு கிளம்பிவிட்டேன். அதன் பின்னர் அப்பா வந்து என்னிடம் பேசி, என்னை சமாதானப்படுத்தி, மன்னிப்பு கேட்டார். அப்போது அவரும் அழுதுவிட்டார், நானும் அழுதுவிட்டேன். எனக்கு கிடைத்த அப்பா போல் வேறு யாருக்கும் அப்பா கிடைக்க மாட்டார். அவரால் தான் நான் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

Manoj Bharathiraja Shares Emotional Experience With Bharathiraja Throwback Interview

கால்கள்: நான் இயக்குநராகன் ஒரு படம் எடுத்தேன். அந்த படத்தில், ராமைய்யா என்ற கதாபாத்திரத்தில் அப்பா (பாரதிராஜா) நடித்திருந்தார். ஒரு நாள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலில் தூங்கிக் கொண்டு இருந்தோம். நடு இரவில் எழுந்த அப்பா, எனது கால்களை பிடித்து விட்டார். நான் உடனே எழுந்து விட்டேன். எனக்கு பதற்றம் ஏற்பட்டு விட்டது. உடனே, அப்பா என்ன அப்பா செய்றீங்க. இப்படி எல்லாம் செய்யாதீங்க அப்பா எனக் கூறினேன். அதற்கு உடனே அப்பா, கால் வலிக்குதாடா? எனக்கு தெரியும்டா, இந்த வேலையோட கஷ்டம் எனக் கூறி தொடர்ந்து கால் பிடித்து விட்டார்" எனக் கூறியுள்ளார்.

Manoj Bharathiraja Shares Emotional Experience With Bharathiraja Throwback Interview

48 வயது: மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான மார்கழி திங்கள் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இயக்குநர் சுசீந்தரனும் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கும்போது மனோஜ்க்கு எப்படியும் சுமார் 45 வயதாவது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மனோஜ் அவரது 48வது வயதில் உயிரிழ்ந்தது அவரது குடும்பத்தினர், திரையுலகினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FAQs
மனோஜ் பாரதி ராஜா எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?

மனோஜ் பாரதி ராஜா, மார்கழி திங்கள் என்ற ஒரே ஒரு படம் மட்டுமே இயக்கியுள்ளார். 

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X