»   »  மனோரமா, சத்யராஜுக்கு பாராட்டு விழா

மனோரமா, சத்யராஜுக்கு பாராட்டு விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil

4 பெண்களை மணந்த ஐசக்குடன் காதல், அரைகுறை உடையில் தங்கை-ஐசக் சகிதமாக கும்மாளம், புளு பிலிம் என சர்ச்சை பல்வேறு சிக்கல்களில்மாட்டி தங்கை, அம்மாவுடன் தலைமறைவாகிவிட்ட டிவி நடிகை தேவிப்பிரியாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா விருது பெற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், பெரியார் விருது பெற்ற சத்யராஜ், சத்யபாமாபல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற மனோரமா ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெறுகிறது.

சமீபத்தில் தமிழக அரசின் அண்ணா விருதை ஆர்.எம்.வீரப்பனும், பெரியார் விருதை சத்யராஜும் பெற்றனர்.இதேபோல சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் மனோரமாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மூன்று பேருக்கும் பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. நடிகர் சங்கவளாகத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் கலையரங்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு பாராட்டுவிழா நடைபெறுகிறது.

சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் ராதாரவி முன்னிலையில், கலை நிகழ்ச்சிகளுடன்பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil