மனோரமாவுக்கு சிறுநீரக பாதிப்பு.. டயாலிஸிஸ் சிகிச்சை!
சென்னை: உடல்நிலை மோசமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருக்கும் மனோரமாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மனோரமாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவருடைய உடல்நிலையை பரிசோதனை செய்தபோது, 'பொட்டாசியம்' குறைபாடு இருப்பதையும், அதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையொட்டி, மனோரமாவுக்கு 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதே நேரம் மனோரமா நல்ல சுய உணர்வுடன் இருப்பதாகவும், அவர் ஆட்களை அடையாளம் கண்டுகொள்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











