»   »  நடிகைகளின் ஆபாசம்: மனோரமா முன் பெண்கள் போராட்டம்! சேலம்: தமிழ்ப் படங்களில் நடிகைகள் ஆபாசமாக நடிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி பெண்கள் அமைப்பினர் நடிகை மனாரமா முன்புபோராட்டம் நடத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நடிகைகள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கூறிய கருத்துக்களால் வெகுண்ட நடிகர் சங்கம், அவரை சங்கத்திற்கு வரவழைத்து மன்னிப்புகேட்க வைத்தது. அந்த நேரத்தில் நடிகைகள் குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் மிகவும் ஆவேசமாக பேசினர். நடிகை மனோரா, சங்கத்திற்குவரும்போது, இப்போது உள்ளே செருப்புடன் போகிறேன், வரும்போது அது இருக்காது என்று பேசிவிட்டுச் சென்றார்.தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர், நடிகைகள் நடந்து கொண்ட விதம் பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கர்பச்சான்விவகாரத்தைப் பொருத்தவரை சட்டப்பூர்வமான நடவடிக்கையில் நடிகர் சங்கம் இறங்கியிருக்க வேண்டுமே தவிர கட்டப் பஞ்சாயத்துநடத்துவது போல நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று பெருவாரியானவர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர் விஜயகாந்த், குஷ்பு ஆகியோரைக் கடுமையாகக் கண்டித்து பச்சானின் சொந்த ஊரான கடலூர்மாவட்டத்தில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.இந்த நிலையில் சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நடிகை மனோரமா கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கினார். அப்போது பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் அங்கு வந்தனர்.அவர்களது கையில் தட்டிகள் இருந்தன. அதில், தங்கர்பச்சான் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வைத்த நடிகர், நடிகைகளின் ஆதிக்கத்தைஒழிப்போம், தமிழ் சினிமாவில் மேலோங்கி நிற்கும் ஆபாசத்தை கண்டிக்கிறோம் என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.மேலும், தமிழ் சினிமாவில் ஆபாசம் தலை தூக்கிவிட்டது. அதைத் தடுக்க மனோரமா போன்ற மூத்த நடிகைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அவரிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் போலீஸார் அதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீஸ்தடுப்பை மீறி பெண்கள் மனோரமாவிடம் செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் மேடை முன்பு நடிகைகளின் ஆபாசத்தைக் கண்டிப்பதாக கூறி கோஷமிட்டபடி கலைந்து சென்றனர்.

நடிகைகளின் ஆபாசம்: மனோரமா முன் பெண்கள் போராட்டம்! சேலம்: தமிழ்ப் படங்களில் நடிகைகள் ஆபாசமாக நடிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி பெண்கள் அமைப்பினர் நடிகை மனாரமா முன்புபோராட்டம் நடத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நடிகைகள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கூறிய கருத்துக்களால் வெகுண்ட நடிகர் சங்கம், அவரை சங்கத்திற்கு வரவழைத்து மன்னிப்புகேட்க வைத்தது. அந்த நேரத்தில் நடிகைகள் குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் மிகவும் ஆவேசமாக பேசினர். நடிகை மனோரா, சங்கத்திற்குவரும்போது, இப்போது உள்ளே செருப்புடன் போகிறேன், வரும்போது அது இருக்காது என்று பேசிவிட்டுச் சென்றார்.தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர், நடிகைகள் நடந்து கொண்ட விதம் பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கர்பச்சான்விவகாரத்தைப் பொருத்தவரை சட்டப்பூர்வமான நடவடிக்கையில் நடிகர் சங்கம் இறங்கியிருக்க வேண்டுமே தவிர கட்டப் பஞ்சாயத்துநடத்துவது போல நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று பெருவாரியானவர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர் விஜயகாந்த், குஷ்பு ஆகியோரைக் கடுமையாகக் கண்டித்து பச்சானின் சொந்த ஊரான கடலூர்மாவட்டத்தில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.இந்த நிலையில் சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நடிகை மனோரமா கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கினார். அப்போது பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் அங்கு வந்தனர்.அவர்களது கையில் தட்டிகள் இருந்தன. அதில், தங்கர்பச்சான் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வைத்த நடிகர், நடிகைகளின் ஆதிக்கத்தைஒழிப்போம், தமிழ் சினிமாவில் மேலோங்கி நிற்கும் ஆபாசத்தை கண்டிக்கிறோம் என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.மேலும், தமிழ் சினிமாவில் ஆபாசம் தலை தூக்கிவிட்டது. அதைத் தடுக்க மனோரமா போன்ற மூத்த நடிகைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அவரிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் போலீஸார் அதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீஸ்தடுப்பை மீறி பெண்கள் மனோரமாவிடம் செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் மேடை முன்பு நடிகைகளின் ஆபாசத்தைக் கண்டிப்பதாக கூறி கோஷமிட்டபடி கலைந்து சென்றனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்:

தமிழ்ப் படங்களில் நடிகைகள் ஆபாசமாக நடிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி பெண்கள் அமைப்பினர் நடிகை மனாரமா முன்புபோராட்டம் நடத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகைகள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கூறிய கருத்துக்களால் வெகுண்ட நடிகர் சங்கம், அவரை சங்கத்திற்கு வரவழைத்து மன்னிப்புகேட்க வைத்தது. அந்த நேரத்தில் நடிகைகள் குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் மிகவும் ஆவேசமாக பேசினர். நடிகை மனோரா, சங்கத்திற்குவரும்போது, இப்போது உள்ளே செருப்புடன் போகிறேன், வரும்போது அது இருக்காது என்று பேசிவிட்டுச் சென்றார்.


தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர், நடிகைகள் நடந்து கொண்ட விதம் பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கர்பச்சான்விவகாரத்தைப் பொருத்தவரை சட்டப்பூர்வமான நடவடிக்கையில் நடிகர் சங்கம் இறங்கியிருக்க வேண்டுமே தவிர கட்டப் பஞ்சாயத்துநடத்துவது போல நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று பெருவாரியானவர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.

தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர் விஜயகாந்த், குஷ்பு ஆகியோரைக் கடுமையாகக் கண்டித்து பச்சானின் சொந்த ஊரான கடலூர்மாவட்டத்தில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நடிகை மனோரமா கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கினார். அப்போது பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் அங்கு வந்தனர்.

அவர்களது கையில் தட்டிகள் இருந்தன. அதில், தங்கர்பச்சான் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வைத்த நடிகர், நடிகைகளின் ஆதிக்கத்தைஒழிப்போம், தமிழ் சினிமாவில் மேலோங்கி நிற்கும் ஆபாசத்தை கண்டிக்கிறோம் என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

மேலும், தமிழ் சினிமாவில் ஆபாசம் தலை தூக்கிவிட்டது. அதைத் தடுக்க மனோரமா போன்ற மூத்த நடிகைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அவரிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் போலீஸார் அதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீஸ்தடுப்பை மீறி பெண்கள் மனோரமாவிடம் செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் மேடை முன்பு நடிகைகளின் ஆபாசத்தைக் கண்டிப்பதாக கூறி கோஷமிட்டபடி கலைந்து சென்றனர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil