மன்சூர் அலிகானிடம் உதை வாங்கிய கூல் சுரேஷ்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை : நடிகர் கூல் சுரேஷ் சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார்.

Recommended Video

Bestie | Yashikaa Anandh-காக First Day First show பார்ப்பேன் *Kollywood | Filmibeat Tamil

புதிய படங்கள் குறித்த அவரது விமர்சனங்கள் ரசிகர்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்று வருகின்றன.

வெந்து தணிந்தது காடு.. வணக்கத்தை போடு என்று அவர் ஒரே மாதிரியான டயலாக்கை ஒவ்வொரு படத்திற்கும் கூறி வருகிறார்.

நடிகர் கூல் சுரேஷ்

நடிகர் கூல் சுரேஷ்

நடிகர் கூல் சுரேஷ் சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார். ஒவ்வொரு புதிய படங்களின் ரிலீசின்போதும் இவர் பிரபலமான தியேட்டர் வாசலில் அந்தப் படத்திற்கான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். நெகட்டிவ்வாக இல்லாமல் பாசிட்டிவ்வாகவும் இவரது விமர்சனங்கள் காணப்படுகின்றன.

மாற்றாத டயலாக்

மாற்றாத டயலாக்

குறிப்பாக வெந்து தணிந்தது காடு, வணக்கத்தை போடு என்ற இவரது டயலாக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சிலர் கடுப்பாவதையும் தடுக்க முடிவதில்லை. காரணம் இந்த டயலாக்கை இவர் மாற்றாமல் இருப்பதுதான். சில சமயங்களில் இவரது விமர்சனங்கள் அபத்தமாக காணப்படுகின்றன. இதுவே அந்தப் படத்திற்கான விளம்பரமாகவும் மாறி விடுகிறது.

தியேட்டர் வாசலில் விமர்சனம்

தியேட்டர் வாசலில் விமர்சனம்

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் ரிலீசின்போது இவர் தியேட்டர் வாசலில் பல் துலக்கிக் கொண்டே பேட்டியளித்திருந்தார். இந்த நிகழ்வு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விமர்சனங்களை எழுப்பியபோதிலும் அதுவும் கூல் சுரேஷிற்கு விளம்பரத்தை கொடுத்திருந்தது.

யாஷிகா கைகளை தடவிய கூல் சுரேஷ்

யாஷிகா கைகளை தடவிய கூல் சுரேஷ்

சமீபத்தில் யாஷிகா ஆனந்தின் பெஸ்டி படத்தின் பிரமோஷனின்போது யாஷிகாவின் கைகளை தடவிக் கொடுத்துக் கொண்டே இவர் பேட்டியளித்திருந்தார். மேலும் அவரது படத்தின் ட்ரெயிலர் வயாக்ரா சாப்பிட்ட ஃபீலை கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறியிருந்தார். வழக்கம்போல வெந்து தணிந்தது காடு, யாஷிகாவிற்கு வணக்கத்தை போடு என்று டயலாக் அடித்தார்.

மன்சூருக்கு வணக்கம்

மன்சூருக்கு வணக்கம்

இவ்வாறு தொடர்ந்து பல சேட்டைகளை அரங்கேற்றிவரும் கூல் சுரேஷ் தற்போது பக்ரீத் பண்டிகையையொட்டி மன்சூர் அலிகான் பொதுமக்களுக்கு கொடுத்திருந்த பிரியாணி விருந்தில் கலந்து கொண்டு மன்சூர் அலிகானுக்கும் வணக்கத்தை போட்டார். அந்த விருந்து குறித்து தொடர்ந்து அவர் விளம்பரம் செய்யும் வகையில் பேசினார்.

அடிக்க பாய்ந்த மன்சூர்

அடிக்க பாய்ந்த மன்சூர்

இதையடுத்து அவ்வாறு விளம்பரப்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய செயலை சிறப்பாகவே செய்துவந்தார் கூல் சுரேஷ். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மன்சூர் அலிகான் அவரை அடிக்க பாய்ந்தார். இதையடுத்து என்னை அடிக்க வரார் என்று விளையாட்டாக கூல் சுரேஷ் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X