தரமற்ற உணவுகளை தடுக்கணும்.. மீனாவின் கணவருக்கு அஞ்சலி செலுத்திய பின் மன்சூர் அலி கான் பேச்சு

சென்னை: மீனாவின் கணவர் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் மன்சூர் அலி கான் அப்படியே கையை கட்டிக் கொண்டு உறைந்து நின்ற காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உருக்கி வருகின்றன.

Recommended Video

Meena Husband Vidyasagar-க்கு என்ன ஆச்சு? | FilmiBeat Tamil *Celebrity

நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், விஷால், குஷ்பு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவோ தொலைபேசி மூலமாகவோ தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை லக்‌ஷ்மி, ரம்பா, இயக்குநர் சேரன், நடிகர் மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நேரடியாகவே மீனாவின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

மீனாவின் திருமணம்

மீனாவின் திருமணம்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா கடந்த 2009ம் ஆண்டு சாஃப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமா பிரபலங்கள் பலர் மீனாவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பழைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

விஷால் இரங்கல்

விஷால் இரங்கல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் காரணமாக உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பிரபலங்களை தொடர்ந்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்யாசாகர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை மீனாவுக்கு ஆறுதலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உடல் தகனம்

உடல் தகனம்

சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் மதியம் 2 மணியளவில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்படும் என்கிற அறிவிப்பை சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கலா மாஸ்டர் அருகே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் மீனாவின் வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மன்சூர் அலி கான் இரங்கல்

மன்சூர் அலி கான் இரங்கல்

நடிகர் மன்சூர் அலி கான் மீனாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், மீனாவின் கணவர் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது வீட்டுக்குச் சென்ற அவர் வித்யாசாகர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு அங்கேயே கையைக் கட்டிக் கொண்டு அசையாமல் உருகி நின்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தரமற்ற உணவுகள்

தரமற்ற உணவுகள்

தமிழ்நாட்டில் தரமற்ற உணவுகள் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. ஹோட்டல்களில் தேவையில்லாமல் அஜினமோட்டோ, ரசாயன காய்கறிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை உடனடியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு தடை செய்தாதால் பலரும் இங்கே நிம்மதியாக வாழ முடியும் என்கிற தனது கருத்தையும் முன் வைத்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X