»   »  வக்கிர புத்தியை தூண்டும் பைத்தியக்காரங்க வீடு: பிக் பாஸை வறுத்தெடுத்த மன்சூர் அலி கான்

வக்கிர புத்தியை தூண்டும் பைத்தியக்காரங்க வீடு: பிக் பாஸை வறுத்தெடுத்த மன்சூர் அலி கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உறுதிகொள் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூர் அலி கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்துள்ளார்.

கோலி சோடா கிஷோர் ஹீரோவாக நடித்துள்ள உறுதிகொள் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் நடிகர் மன்சூர் அலி கான் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது,

பிரச்சனை

பிரச்சனை

ஒரு நாட்டில் பிரச்சனை இருக்கலாம். ஆனால் பிரச்சனையே நாடாக இருக்கிறது தமிழ்நாடு. பிக் பாஸ் பைத்தியக்காரங்க வீடு மாதிரி இருக்கு தமிழ்நாடு.

பிக் பாஸ்

பிக் பாஸ்

இந்தியாவே ஒரு பெரிய பிக் பாஸ் பைத்தியக்கார வீடு தான். அந்த பெரிய பிக் பாஸு நம்ம பிரதமர் நரேந்திர மோடி தான். பிக் பாஸ் வந்து ஆடுகளை முட்டவிட்டு ரத்தம் குடிக்கிற மாதிரி இருக்கு.

கமல்

கமல்

கமல் சார் ஒரு ஜீனியஸ். அதை நான் பலமுறை சொல்லியுள்ளேன். பக்கத்து வீட்டில் ஒரு விஷயம் நடந்தால் அதை பார்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். அதவாது சண்டை மூட்டிவிட்டு வக்கிர புத்தியை தூண்டிவிடுவது மாதிரி.

சல்மான்

சல்மான்

வட இந்தியாவில் வேண்டுமானால் பிக் பாஸ் ஹிட்டாக இருக்கலாம். சல்மான் கானுக்கு சரியாகப் படலாம். ஏன் என்றால் அங்கு மாதம் மும்மாரி பொழியுது, மக்கள் சந்தோஷமாக உள்ளார்கள். எல்லா ஆறு, குளத்தில் தண்ணீர் ஓடுகிறது.

தியேட்டர்

தியேட்டர்

கமல் நடத்தும் பிக் பாஸால் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது. நைட்ஷோவுக்கு தான் நிறைய பேர் தியேட்டருக்கு போவாங்க. அந்த நேரத்தில் இந்த டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்புவதால் கூட்டம் இல்லை. டிவி ஷோவை காலையில் நடத்துங்க. சினிமா பாதிக்கக் கூடாது என்பது கமல் ஐயா மற்றும் விஜய் டிவிக்கு என் வேண்டுகோள் என்றார் மன்சூர் அலி கான்.

English summary
Actor Mansoorali Khan has blasted Big Boss TV reality show at the audio launch of Uruthikol movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil