"அதிரடி": மேக்கப்மேனுக்கு கேரவனா?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்.. ஸ்டிரைக் செய்த தொழிலாளர்கள்!
சென்னை: சென்னையில் நடந்த அதிரடி படத்தின் ஷூட்டிங்கின்போது திடீர் ரகளை ஏற்பட்டு விட்டது.
இதனால் படப்பிடிப்புக்கு வந்த பெப்சி தொழிலாளர்களை நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் அதிரடியாக விரட்டி விட்டு விட்டு வேறு சிலரை வரவழைத்துப் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார்.
மன்சூரன் அலிகான் திடீரென ஏதாவது படம் எடுப்பார். அவரே ஹீரோவாக நடிப்பார். ஏகப்பட்ட நடிகர்களைப் போட்டு படம் பிடிப்பார். தயாரிப்பாளரும் அவராகவே இருப்பார்.

அதிரடி நாயகன்
அந்த வகையில் தற்போது அதிரடி என்ற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ராதாரவியுடன்
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆவடி பகுதியில் நடந்தது. அதில் மன்சூரும், ராதாரவியும் இணைந்து நடித்த காட்சிகளை சுட்டுக் கொண்டிருந்தனர்.

பஞ்சாயத்து
அப்போது திடீரென ஒரு பஞ்சாயத்தைக் கூட்டி விட்டனர். அதாவது படத்தின் மேக்கப்மேன் தனக்கு தனியாக கேரவன் தேவை என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் மன்சூர் அலிகான் கொந்தளித்து விட்டாராம்.

மேக்கப்மேனுக்கு கேரவனா
மேக்கப்மேனுக்கு தனியா எப்படி கேரவன் தர முடியும், முடியவே முடியாது என்று கூறி விட்டாராம். மேலும் மேக்கப்மேன் திடீரென கூடுதல் சம்பளமும் கேட்டதாக தெரிகிறது. இதனால் மேலும் கடுப்பாகியுள்ளார் மன்சூர்.

எல்லாரும் ஓடிப் போய்டு
மேக்கப் மேனுக்கு ஆதரவாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட பெப்சி தொழிலாளர்களும் வேலை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் கோபமான மன்சூர் அலிகான் அத்தனை பேரையும் வெளியேறச் சொல்லியுள்ளார். கோபமாகவும் அவர்களிடம் பேசியுள்ளார். இதையடுத்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

நீங்க வாங்க பாஸ்
ஆனால் சற்றும் மனம் கலங்காத விக்கிரமாதித்தன் போல, வேறு சிலரை வரவழைத்துப் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தினாராம் மன்சூர் அலிகான்.

தடை வருமோ...
விரைவில் பெப்சியிலிருந்து மன்சூருக்கு தடை வரலாம் என்று பேச்சு அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











