ரஜினி பட ரேஞ்சுக்கு மன்சூர் அலி கான் ஷூட்டிங்கில் கூடிய கூட்டம்
சென்னை: சென்னையில் நடந்த மன்சூர் அலி கானின் படப்பிடிப்பை பார்க்க ரஜினிகாந்த் பட அளவுக்கு கூட்டம் கூடியது.
மன்சூர் அலி கான் தற்போது தயாரித்து நடித்து வரும் படம் அதிரடி. இந்த படத்தில் நடித்து தயாரிப்பதோடு அவர் நின்றுவிடவில்லை. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் ஏன் இசை கூட அவர் தான்.
அப்படி என்றால் இயக்கத்தை பற்றி கூறவில்லையே என்று கேட்டால் அதை மட்டும் பாலு ஆனந்த் பொறுப்பில் விட்டுள்ளார்.

மாஸ்டர்
சிலம்பம், களறி, மான் கொம்பு சண்டை, வாள்வீச்சு உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக மன்சூர் அலி கான் நடிக்கிறார்.

படம்
ஒரு பயில்வானின் கதையை படமாக்க நினைத்த சினிமா தயாரிப்பாளர் மன்சூர் அலி கானை தனது படத்தில் நடிக்க வைக்கிறார்.

மீட்டர் வட்டி
தயாரிப்பாளர் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கி படத்தை எடுக்கிறார். அப்படி இருக்கையில் நிதி பிரச்சனையால் படம் நின்றுவிடுகிறது. கடன் கொடுத்தவர்கள் தயாரிப்பாளரிடம் பணத்தை கேட்டு பிரச்சனை செய்கிறார்கள்.

கதை
தயாரிப்பாளரின் நிதி பிரச்சனையை தீர்த்து படத்தை எப்படி மன்சூர் அலி கான் முடித்துக் கொடுக்கிறார் என்பதே கதை.

மவ்மிதா சவுத்ரி
அதிரடி படத்தில் மன்சூர் அலி கானுக்கு ஜோடியாக மவ்மிதா சவுத்ரி என்ற மேற்கு வங்க மாநில நடிகை நடிக்கிறார்.

சென்னை
மன்சூர் அலி கான், மவ்மிதா டூயட் பாடல் சென்னை ராயபுரத்தில் படமாக்கப்பட்டது. அப்போது மன்சூர் பெரிய மீனை தோளில் தூக்கி வந்தார். ரஜினி படப்பிடிப்பு போன்று அங்கு கூட்டம் கூடியது.


Click it and Unblock the Notifications











